Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி

4 முறை தஞ்சாவூர் வந்துள்ளேன்

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.கே வெங்கடேசன் இல்லத் திருமண விழாவை நடத்தி மணமக்களை எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தி பேசினார். நான் அடிக்கடி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகிறேன், கடந்த மூன்று மாதத்தில் மட்டும் நான்கு முறை தஞ்சாவூருக்கு வருகிறேன் நானே தஞ்சாவூருக்கு வரவில்லை என்றாலும் இந்த அரசு என்னை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்து வருகின்றது, இந்த அரசால் பெரிதும் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான், விவசாயிகள் பிரச்சனைகளை இந்த அரசுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில் போராடுவதற்காக தான் நான் தஞ்சாவூருக்கு வந்தேன்,காவிரியில் தண்ணீர் வரவில்லை என சொன்னதற்கு இரவோடு இரவாக கைது செய்தனர்,

மன்னிப்பு கேட்டு பல்டி அடித்த தவெக அரசு

டம்மி முதலமைச்சராக செயல்படாத முதலமைச்சராக இருக்கிறார் என அந்தப் போராட்டத்தில் 22 நிமிடங்கள் பேசினேன் ஆனால் அதற்கெல்லாம் அவர்கள் கைது செய்யவில்லை காவிரியில் தண்ணீர் வரவில்லை என சொன்னதுக்கு தான் கைது செய்தார்கள், என்னை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்து வந்தனர் ஆனால் தஞ்சாவூரே ஸ்தம்பித்தது. என்னை கைது செய்ததற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு பல்டி அடித்தது இந்த அரசு, டெல்டா மண்டலம் எப்போதுமே திமுகவின் கோட்டை என்பதை இந்த தேர்தலிலும் நிரூபித்திருக்கிறது டெல்டா மண்டலத்தில் வெறும் நான்கு தொகுதிகளை மட்டும்தான் இந்த ஆளுங்கட்சியினரால் பெற முடிந்தது,

குறுவை சாகுபடி- விவசாயிகள் பாதிப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் ஜூன் 12 ஆம் தேதி சரியாக மேட்டூர் அணை திறக்கப்பட்டது, ஆனால் இந்த அரசு சரியான நேரத்தில் தண்ணீரை திறக்காததால் டெல்டா மாவட்டம் முழுவதும் குறுவை சாகுபடி பாதித்துள்ளது, வறட்சி நிவாரண நிதி அறிவிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தொடர்ந்து பேசி வருகிறேன் ஆனால் நிதி இல்லை என மறுத்து விட்டார்கள், விவசாயிகளுக்கு நிதி இல்லை ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு கார் வாங்குவதற்கு மட்டும் பணம் இருக்கிறது,

திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் அதற்கு பதிலாக விவசாயிகள் பிரச்சனையை தீர்த்து வையுங்கள் என நம்முடைய தலைவர் ஏற்கனவே சொல்லிவிட்டார், அதற்கும் ஆளுங்கட்சியினர் சண்டைக்கு வருகிறார்கள், தினசரி சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியினர் அடிக்கும் கூத்துக்களை மக்களாகிய நீங்கள் லைவில் நேரடியாக பார்த்து வருகிறீர்கள், மக்கள் பிரச்சினையை பேசுவதற்காக ஆளுங்கட்சியினர் சட்டமன்றத்திற்கு வருவதில்லை, டைவர்ஷன் அரசியலை தான் தமிழக வெற்றி கழகத்தினர் செய்து வருகின்றனர்,

நாம் மக்கள் பிரச்சனையை மையப்படுத்தி கேள்வி கேட்டால் முதலமைச்சர் எந்த பதிலும் அளிப்பதில்லை இந்த அமைச்சரவையில் மூன்றே மூன்று அமைச்சர்கள் தான் மாற்றி மாற்றி பேசுகிறார்கள் அதுவும் நாம் ஒன்று கேட்டால் பதில் ஒன்று வருகிறது, மக்கள் பிரச்சனையை பற்றி சட்டமன்றத்தில் பேசாமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் ஆளுங்கட்சியினர் சட்டமன்றத்தில் அடிக்கும் கூத்துக்களை நீங்களே பார்க்கிறீர்கள்,

இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.?

நம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது அது மட்டுமில்லாமல் மின்சார கட்டணம் மூன்று மடங்கு நான்கு மடங்கு அதிகமாகி உள்ளது நீங்கள் சரியாக ரீடிங் எடுப்பதில்லை என கேள்வி எழுப்புகிறார் ஆனால் அதற்கு சம்பந்தமே இல்லாமல் ஒருத்தர் பதில் அளிக்கிறார் அந்த காட்சிகளையும் நீங்களே பார்த்திருப்பீர்கள், ஆளுங்கட்சி அமைச்சர்கள் மக்கள் பிரச்சனையை பேச வரவில்லை அவர்களுக்கு தேவையெல்லாம் தினசரி இரண்டு ரீல்ஸ்கள் தான். சர்க்கார் நடத்துகிறார்களா அல்லது சர்க்கஸ் நடத்துகிறார்களா? என்று தான் கேட்கத் தோன்றுகிறது

நம்முடைய திராவிடமாடல் ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றி காட்டினார் நம்முடைய தலைவர் மு.க ஸ்டாலின் ஆனால் இன்றைக்கு ஒரு டம்மி முதலமைச்சர் தமிழ்நாட்டை அதல பாதாளத்துக்கு தள்ளிவிட்டார், இந்த அரசின் ஆணவத்திற்கும் கோமாளித்தனத்திற்கும் மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என உதயநிதி தெரிவித்தார்.

Source: Read Full Article

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.கே. வெங்கடேசனின் இல்லத் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்திப் பேசினார். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தான் நான்கு முறை தஞ்சாவூருக்கு வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சித்த உதயநிதி, அந்த கட்சிக்கு தினசரி இரண்டு ரீல்ஸ் மட்டுமே தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார். தற்போதைய ஆட்சி ஒரு சர்க்காரா அல்லது சர்க்கஸா என்றும் அவர் கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்தார்.