PulseNews
சினிமா

தவெக எம்.எல்.ஏ மீது பாய்ந்த வழக்கு; போலீசார் அதிரடி நடவடிக்கை!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜூலை 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படம் வெளியிடப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த சோளிங்கர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கபிலிடம் செய்தியாளர்கள் படம் எப்படி இருந்தது என கேள்வி எழுப்பி உள்ளனர். அப்பொழுது மைக்கை பிடித்த யூடியூப் சேனலைச் சேர்ந்த சிவா என்பவரை எம்.எல்.ஏ அடிக்க கை ஓங்கிய வீடியோ சமூக வலைதளங்களிலும் ஒரு சில செய்தி சேனலிலும் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சிவாவை, எம்.எல்.ஏ மீது எந்த தவறும் இல்லை நான் தான் மைக்கை நீட்டினேன் அவர் விளையாட்டாக கை ஓங்கினார் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பதிவிடுமாறு கபிலின் ஆதரவாளர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை சிவா பதிவிட்டுள்ளார். மீண்டும் அவரை தொடர்பு கொண்ட கபில் மற்றும் அவருடைய சகோதரர் தனஞ்செழியன் சிவாவை யூடியூப் சேனலிலும் இந்த வீடியோவை பதிவிடுமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அவரை மிரட்டியதோடு அவருடைய அலுவலகத்திற்கு உடனடியாக வரும்படி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்பு அந்த நபர் வைத்துள்ள ஸ்டுடியோ அலுவலகத்திற்கு வந்த கபில், அவருடைய சகோதரர் தனஞ்செழியன் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் அந்த நபரை சரமாரியாக புரட்டி எடுத்துள்ளனர். இதனை அங்கிருந்த செய்தியாளர்கள் அரங்கநாதன் மற்றும் கல்யாணசுந்தரம் வீடியோ எடுத்துள்ளனர். அதைக் கண்டு அவர்கள் வீடியோ எடுத்த செய்தியாளர்களையும் சரமாரியாக புரட்டி எடுத்து அவர்களுடைய கையில் இருந்த செல்போனை பிடுங்கி அதிலிருந்து வீடியோக்களை அழித்துள்ளனர். எம்.எல்.ஏ கபில் மற்றும் அவருடைய சகோதரர் தனஞ்செழியன் தாக்கியதில் காயமடைந்த செய்தியாளர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செய்தியாளரை தவெக எம்.எல்.ஏ தாக்கிய சம்பவத்துக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த சம்பவம் குறித்து சோளிங்கர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ கபில் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீதும் அவரது சகோதரர் தனஞ்செழியன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தவெக எம்.எல்.ஏ மீது பாய்ந்த வழக்கு; போலீசார் அதிரடி நடவடிக்கை!
PulseNews சுருக்கம்

ஜூலை 23 அன்று தமிழகம் முழுவதும் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்தபின், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் திரையரங்கிற்கு வெளியே வந்த தவெக எம்.எல்.ஏ கபிலிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அப்போது, யூடியூப் சேனல் செய்தியாளரான சிவாவை எம்.எல்.ஏ கபில் தாக்க கை ஓங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் வெளியாகின.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக எம்.எல்.ஏ கபில் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema