PulseNews
சினிமா

94-ல் தமிழ் படத்தில் ஹீரோயின்; 60 வயது சல்மான் கானுக்கு அம்மா ஆன 51 வயது நடிகை: அந்த கேரக்டர் அவ்வளவு முக்கியமாம்!

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வரும் தனது நடிப்பு வாழ்க்கையில், பல்வேறு மொழிகளில் வித்தியாசமானதும், கவனம் ஈர்க்கக்கூடியதுமான ஏராளமான திரைப்படங்களில் சோனாலி குல்கர்னி நடித்துள்ளார். சுயாதீன திரைப்படங்கள் முதல் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்கள் வரை பல படங்களில் இடம்பெற்றுள்ள சோனாலி, 2019ஆம் ஆண்டு வெளியான ‘பாரத்’ என்ற திரைப்படத்தில் சல்மான் கான் நடித்த கதாபாத்திரத்தின் தாயாக நடித்திருந்தார். சல்மான் கானின் தாய் கதாபாத்திரத்தை ஏன் ஏற்றுக்கொண்டார்? சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இப்படத்தில் தனது மகனாக நடித்த சல்மான் கானைவிட சோனாலி 9 வயது குறைவானவர். சல்மானுக்கு 60 வயதும், சோனாலிக்கு 51 வயதும் ஆகிறது. இந்த வயது வித்தியாசம் இருந்தபோதிலும் அந்த கேரக்டரை தேர்வு செய்தது குறித்து சோனாலி சமீபத்தில் ‘ஸ்க்ரீன் ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியுள்ளார். “காஸ்டிங் நடைபெற்றபோது, ‘என்னால் இந்த கேரக்டரில் நடிக்க முடியாது’ என்று நான் கூறினேன். ஆனால், திரைப்படத்தில் இடம்பெற்ற ஃப்ளாஷ்பேக் காட்சிகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் காரணமாக, இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர் மற்றும் காஸ்டிங் இயக்குநர் முகேஷ் சாப்ரா ஆகியோர் என்னை தேர்வு செய்வதில் உறுதயாக இருந்தனர். அந்த திரைப்படத்தைப் பொறுத்தவரை ஃப்ளாஷ்பேக் காட்சிகள் மிகவும் முக்கியமானவை. அந்தக் காட்சிகளின் மூலமாகத்தான் அந்த கேரக்டருக்கு ‘பாரத்’ என்ற பெயர் கிடைக்கிறது. மேலும், கதாநாயகன் சூழ்நிலைகளுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார் என்பதும் அதன்மூலம் வெளிப்படுகிறது. ஒரு இயக்குநரும் காஸ்டிங் இயக்குநரும் தங்களுக்கு பொருத்தமில்லாத ஒருவரை வேண்டுமென்றே எந்தவொரு கேரக்டரிலும் தேர்வு செய்ய விரும்பமாட்டார்கள். அது அவர்களுக்கும் தோல்வியாகிவிடும். அதனால், அவர்களின் பார்வையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்து, அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டேன்,” என்று அவர் தெரிவித்தார். தான் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குநரும் காஸ்டிங் இயக்குநரும் தன்னை “மிகவும் வற்புறுத்த வேண்டியிருந்தது என்று கூறியுள்ள சோனாலி, சல்மான் கானைப் பற்றி ஏற்கனவே நிறைய விஷயங்களைக் கேள்விப்பட்டிருந்ததால், அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற தனக்கு சொந்த “ஆர்வமும்” இந்த கேரக்டரை ஏற்றுக்கொள்ள ஒரு காரணமாக இருந்ததாக சோனாலி தெரிவித்தார். பாரத்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் நாங்கள் மிகவும் நெருக்கமாகவும் நட்பாகவும் பழகினோம். மற்றவர்களிடம் எப்படி நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். அவர் எப்போதும் மிகவும் மரியாதையுடன்தான் நடந்துகொண்டார். மேலும், அவர் தனது சைக்கிளை ஓட்டுவதற்கு எனக்கு கொடுத்தபோது, அவர் மீது எனக்கு இன்னும் அதிகமான அன்பு ஏற்பட்டது,” என்று சோனாலி சிரித்துக்கொண்டே கூறினார். சல்மான் கான் பிலிம்ஸ் தயாரித்த இந்த திரைப்படத்தில் தனக்கு “மிகச் சிறந்த சம்பளம்” வழங்கப்பட்டதாகவும் சோனாலி தெரிவித்தார். மேலும், பாரத்தின் குழந்தைப் பருவ கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்துடன்தான் தனக்கு “அதிகமான காட்சிகள்” இருந்ததாகவும், சல்மான் கான் நடித்த வயது வந்த பாரத்துடன் “மிகக் குறைவான காட்சிகள்” மட்டுமே இருந்ததாகவும் சோனாலி கூறினார். ‘பாரத்’ திரைப்படத்தில் கதாநாயகியான குமுத் ரெய்னா கதாபாத்திரத்தில் நடித்த கத்ரீனா கைஃப், ‘ஐத்தே ஆ’ என்ற பிரபலமான பாடலில் சல்மான் கானுடன் இணைந்து நடனமாடியிருந்தார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
94-ல் தமிழ் படத்தில் ஹீரோயின்; 60 வயது சல்மான் கானுக்கு அம்மா ஆன 51 வயது நடிகை: அந்த கேரக்டர் அவ்வளவு முக்கியமாம்!
PulseNews சுருக்கம்

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திரைத்துறையில் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் சோனாலி குல்கர்னி, பல கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களை ஏற்றுள்ளார். 1994-ல் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர், சுயாதீன படங்கள் முதல் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வரை தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டு வெளியான ‘பாரத்’ திரைப்படத்தில் 60 வயது சல்மான் கானின் தாயாக 51 வயது சோனாலி குல்கர்னி நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் கதைக்கு மிக முக்கியமானது என்பதால், அத்தகைய வலுவான பாத்திரத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema