PulseNews
சினிமா

சில நிமிட நிகழ்ச்சிகாக பல கோடி செலவா? மேட்டூரில் முதல்வர் விஜய் செய்த சம்பவம்! கொதிக்கும் தமிழக மக்கள்...!!!

தமிழக அரசியலில் முதல்வர் விஜய்யின் மேட்டூர் அணை பயணம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அணை மதகுகளைத் திறந்து மலர் தூவும் சில நிமிட நிகழ்ச்சிக்காக அவர் தனி சொகுசு விமானத்தில் சென்றது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் செலவு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. வழக்கமாக சேலம், மேட்டூர் போன்ற பகுதிகளுக்குச் சாலை மார்க்கமாகவோ, அரசு ஹெலிகாப்டர் மூலமாகவோ செல்லும் நடைமுறை உள்ள நிலையில், அரை நாள் பயணத்துக்கு தனி ஜெட் விமானம் பயன்படுத்தப்பட்டது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. இதையும் படிங்க: அதிர்ச்சி! திடீரென மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் விஜய்....!!! சில நிமிட நிகழ்ச்சிக்கு பல கோடி செலவா? சாலை வழியாகப் பயணம் செய்திருந்தால் வழியில் பல்வேறு மாவட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிய முடிந்திருக்கும் என்றும் எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர். சாமானியர்களின் முதல்வர், விவசாயிகளின் பாதுகாவலர் என்ற அரசியல் பிம்பத்துக்கு மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களைப் போல தனி விமானத்தில் பயணிப்பது முரண்பாடாக இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. மேட்டூரில் நிகழ்ச்சியை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், பல கோடி ரூபாய் மதிப்பில் இரும்பு பேரிகார்டுகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கான செலவு மக்கள் வரிப்பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டதா, அவ்வளவு பெரிய பாதுகாப்பு ஏற்பாடு அவசியமா என்பதும் அரசியல் களத்தில் விவாதமாகியுள்ளது. பரந்தூர் முடிவுடன் ஒப்பிட்டு கேள்வி இந்த விமர்சனங்களுக்கு இடையே, சமீபத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக அரசு எடுத்த முடிவும் பேசுபொருளாகியுள்ளது. விவசாய நிலங்கள், நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் பரந்தூர் திட்டம் கைவிடப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். ஒருபுறம் விவசாய நிலங்களைப் பாதுகாப்பதை காரணமாகக் கூறி விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மறுபுறம் தனது பயணத்துக்கு தனி விமானத்தைப் பயன்படுத்துவது ஏன் என தொழில்துறை வட்டாரங்களிலும் கேள்விகள் எழுந்துள்ளன. இதனால் இரு முடிவுகளுக்கும் இடையிலான முரண்பாடு குறித்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. டெல்டா விவசாயிகள் நிலை குறித்து கேள்வி இதற்கிடையே, போதிய நீர்வரத்து இல்லாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. டெல்டா விவசாயிகள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் சூழலில், அணை திறப்பு நிகழ்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஆடம்பரச் செலவுகள் கவனத்தை ஈர்த்துள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரத்தில், சில நிமிட நிகழ்ச்சிக்காக தனி விமானப் பயணம் மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவையா என்ற கேள்வி தற்போது தமிழக அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது. இது நிர்வாகத்தின் முடிவா அல்லது அரசியல் ரீதியான முரண்பாடா என்ற விவாதமும் தொடர்ந்து வருகிறது. இதையும் படிங்க: அவசரப்பட்டுடோமோ... ஆலோசனையே இல்லாமல் இப்படி ஒரு முடிவு! கசிந்த சீக்ரெட்.... பரபரப்பில் அரசியல் களம்!!!

Tamil Spark15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சில நிமிட நிகழ்ச்சிகாக பல கோடி செலவா? மேட்டூரில் முதல்வர் விஜய் செய்த சம்பவம்! கொதிக்கும் தமிழக மக்கள்...!!!
PulseNews சுருக்கம்

மேட்டூர் அணை மதகுகளைத் திறந்து மலர் தூவும் சில நிமிட நிகழ்ச்சிக்காக முதல்வர் விஜய் தனி சொகுசு விமானத்தில் பயணம் மேற்கொண்டது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக சாலை மார்க்கமாகவோ அல்லது அரசு ஹெலிகாப்டர் மூலமாகவோ மேற்கொள்ளப்படும் இத்தகைய பயணங்களுக்கு, மாறாகத் தனி ஜெட் விமானத்தைப் பயன்படுத்தியது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த அரை நாள் பயணத்திற்காகச் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இதற்காகச் செலவிடப்பட்ட தொகை குறித்துப் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறுகிய நேர நிகழ்ச்சிக்காகப் பொதுப்பணத்தில் இவ்வளவு பெரிய செலவு செய்யப்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema