PulseNews
சினிமா

ரஜினி, விஜய், அஜித் முன்னணி நடிகர்களுக்கு 'நோ', ஆனா இந்த நடிகர் ஒரு போன் கால் பண்ணாலே போதும்: பட ப்ரமோஷன் பற்றி நயன்தாரா ஓபன் டாக்

ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிக்கு ஏற்ப, எவ்வளவு பிரம்மாண்டமான படமாக இருந்தாலும் அதற்கு ப்ரமோஷன் என்பது மிக மிக முக்கியம். சமூகவலைதளங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு படத்திற்கு ப்ரமோஷன் எவ்வளவு முக்கியம் என்பதை சில படத்தின் வெற்றியும் சில படத்திற்கு வரவேற்பு கிடைக்காத நிகழ்வையும் சொல்லலாம். அதேபோல், ஒரு சில நடிகைகள் தங்கள் எவ்வளவு பெரிய படங்களில் நடித்திருந்தாலும், முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும், ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டார்கள். அந்த வரிசையில் நடிகர்களை குறிப்பிட வேண்டும் என்றால் அஜித்தை சொல்லலாம். நடிகைகளில் நயன்தாரா முக்கியமானவர். ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கும் இவர் அந்த படங்களில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதே இல்லை. அதே சமயம், தனது நிறுவனம் தயாரிக்கும் படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நேர்காணல்கள் ஆகியவற்றில் நயன்தாரா பங்கேற்றுள்ளார். அந்த வகையில் அவர் கடைசியாக, தனது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கிய ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது தனது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள டாக்ஸிக் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நயன்தாரா பங்கேற்றுள்ளார். பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொள்வதில்லை என்றாலும், ‘டாக்ஸிக்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு மட்டும் ஏன் வந்தேன் என்பது குறித்து பேசிய நயன்தாரா, ‘டாக்ஸிக்’ திரைப்படம் தனக்கு மிகவும் சிறப்பான படம் என்றும் அதற்கு முக்கியமான காரணங்களில் ஒருவர் நடிகர் யஷ் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் பொதுவாக எந்தவொரு புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. ஏனென்றால், அதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் எனக்கு அவ்வளவாக திறமை இல்லை. அதனால்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால், இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று யஷ் என்று நினைக்கிறேன். அவர் என்னை அழைத்தார். அதனால்தான் நான் வந்தேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அவருடைய போன் கால் மட்டுமே எனக்குப் போதுமான காரணம் என்று நினைக்கிறேன். இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலாக இருப்பதற்கு இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இருக்கும் ஒரு பார்வையும் (Vision) அதில் முக்கியமானது என்று நயன்தாரா கூறியுள்ளார். நடிகர் யஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நயன்தாராவுடன் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரெய்லருக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ரஜினி, விஜய், அஜித் முன்னணி நடிகர்களுக்கு 'நோ', ஆனா இந்த நடிகர் ஒரு போன் கால் பண்ணாலே போதும்: பட ப்ரமோஷன் பற்றி நயன்தாரா ஓபன் டாக்
PulseNews சுருக்கம்

ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும், வழக்கமாகப் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் நயன்தாரா பங்கேற்பதில்லை. தான் நடிக்கும் படங்களின் விளம்பரங்களில் கலந்துகொள்வதில் தனக்கு ஆர்வம் இல்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ள அவர், அந்தத் தடையை மீறி தற்போது 'டாக்ஸிக்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளார்.

இந்தத் திரைப்படம் தனக்கு மிகவும் சிறப்பானது என்று குறிப்பிட்ட அவர், நடிகர் யஷ் தன்னை நேரில் அழைத்ததால் மட்டுமே இந்த நிகழ்விற்கு வந்ததாகத் தெரிவித்தார். யஷின் ஒரு போன் அழைப்பே தான் இந்த விழாவில் கலந்துகொள்ளப் போதுமானதாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார். கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema