PulseNews
சினிமா

TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?

TVK Vijay: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு மிக முக்கிய பதவி வழங்க தவெக திட்டமிட்டுள்ளதாம்.

அணி அணியாய் இணையும் அதிமுகவினர்..!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதையடுத்து, முதல்முறையாக ஆட்சி அமைத்த முதலமைச்சர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி, ரத்தத்தின் ரத்தங்கள் அணி அணியாய் படையெடுத்து வருகின்றனர். 6 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததோடு, பல முன்னாள் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் உள்ளிடோரும் ஒவ்வோரு வார சனிக்கிழமைகளில் பனையூரில் முகாமிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டை நீண்ட காலம் ஆண்ட ஒரு கட்சிக்கு வந்த மிக மோசமான சூழலாக இது கருதப்படுகிறது.

பொறாமையில் மாஜி அதிமுகவினர்

அதிமுகவில் இருந்து ஏராளமானோர் தவெகவை நோக்க வந்தாலும், அவர்களில் பெரும்பாலானோரால் முதலமைச்சர் விஜயை நேரடியாக சந்திக்க கூட முடியவில்லை. அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தலைமையிலேயே ஆளுங்கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். அதிமுகவின் முக்கிய முகங்களாக கருதப்பட்ட சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரால் கூட எடுத்த எடுப்பிலேயே முதலமைச்சர் விஜயை சந்திக்க முடியவில்லை. அமைச்சர்கள் முன்னிலையிலேயே தவெகவில் இணைந்தனர். ஆனால், இதுவரை எம்.எல்.ஏ கூட ஆகாத அதிமுகவின் முன்னாள் ஐடி விங் செயலாளரான சிங்கை ராமச்சந்திரன், முதலமைச்சர் விஜயை நேரடியாக சந்தித்து தவெகவில் இணைத்துக்கொண்டுள்ளார். தங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு இவருக்கு மட்டும் எப்படி கிடைத்தது? என மாஜி அதிமுகவினர் அதிருப்தியிலும் பொறாமையிலும் உள்ளனராம்.

ஆள் பார்த்து சேர்க்கும் முதலமைச்சர் விஜய்..!

பொதுவாக தவெகவில் இணைபவர்கள் மற்றும் தன்னை நேரில் சந்தித்து கட்சியில் இணையும் நபர்களின் கடந்த கால வரலாற்றை ஆராய்ந்தே, அவர்களுக்கான முக்கியத்துவத்தை முதலமைச்சர் விஜய் வழங்கி வருகிறாராம். விஜயபாஸ்கர்கள் போன்றோர் மீது ஊழல் வழக்குகள் இருந்தாலும், கட்சியை அடிமட்ட அளவில் வளர்க்க உதவுவார்கள் என்பதால் தான் அதற்கேற்ற பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளனவாம். ஆனால், உடனடியாக அவர்களால் முதலமைச்சரை சந்திக்க முடியவில்லை. அதேநேரம், சிங்கை ராமச்சந்திரன் திறமை வாய்ந்தவர் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர், வலுவான கல்வி பின்புலம் கொண்ட இவர் தான், அதிமுகவில் ஐடி விங் எனும் பிரிவையே உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து தவெகவிற்கு வரவேற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்: TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்

முக்கிய பதவியை வழங்க பரிசீலனை

அதிமுகவில் இருந்து ஏராளமானோர் தவெகவில் இணைந்தாலும், அவர்களுக்கு உடனடியாக எந்த பதவியும் வழங்கப்படவில்லை. நீண்ட காத்திருப்புக்குப் பிறகே விஜயபாஸ்கர்கள், மரகதம் குமரவேல் போன்றோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன. அதேநேரம், கடம்பூர் ராஜு போன்றோருக்கு எந்தவித முக்கியத்துவமும் இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால், சிங்கை ராமச்சந்திரனுக்கு முக்கிய பதவியை வழங்க தவெக ஏற்கனவே பரிசீலனையை தொடங்கியுள்ளதாம். வெளியாகியுள்ள தகவலின்களின்படி, தமிழ்நாடு கைடன்ஸ் முகமையின் தலைவராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட உள்ளதாம். 1992ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முகமை, தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனுமதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகளை ஒரே இடத்திலிருந்து வழங்குகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பின் பொறுப்பை தான் சிங்கை ராமச்சந்திரன் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

கல்வி பின்புலமே காரணம்..!

கோயம்புத்தூரில் பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்தார். அதே கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்பு இந்தியாவின் புகழ்பெற்ற மேலாண்மை கல்வி நிறுவனமான ஐஐஎம் அகமதாபாத்தில் (IIM Ahmedabad) 2013-2015 ஆம் ஆண்டுகளில் எம்பிஏ படிப்பை முடித்தார். இந்த வலுவான கல்வி பின்புலம் மற்றும் அதிமுக எனும் பெரும் இயக்கத்தில் பணியாற்றிய அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே, சிங்கை ராமச்சந்திரனை தமிழ்நாடு கைடன்ஸ் முகமையின் தலைவராக நியமிக்க ஆளுங்கட்சி ஆலோசனையி ஈடுபட்டுள்ளதாம்.
Source: Read Full Article

Ipd Tamil - Latest Tamil News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
PulseNews சுருக்கம்

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு, அக்கட்சியில் மிக முக்கிய பொறுப்பு ஒன்றை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் அதிமுகவினர் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பல நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகின்றனர். இதில் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, முதலமைச்சர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema