“புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்” - முதல்வர் விஜய் புகழஞ்சலி!
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா இன்று (25-08-26) ரசிகர்களாலும், கட்சித் தொண்டர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் புகழ் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மறைந்த விஜயகாந்துக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளதாவது, “மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன். திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் பிறந்தநாள் தினத்தை ஆகஸ்ட் 25-யை வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிக கடைப்பிடித்து வருகிறது. இதனை முன்னிட்டு நேற்று (24.08.2026) கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் இன்று (25-08-26) அவரது ரசிகர்களாலும் கட்சித் தொண்டர்களாலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்வை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜோசப் விஜய், விஜயகாந்திற்கு தனது புகழஞ்சலியைத் தெரிவித்துள்ளார். புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்துத் திகழட்டும் என அவர் தனது அஞ்சலியில் குறிப்பிட்டுள்ளார்.