PulseNews
சினிமா

இவர் என்னை பொம்மை என்று தான் அழைப்பார், அதுக்காக படத்தில் ஒரு சீனே இருக்கு: பிரபல நடிகர் பற்றி மீனா சொன்ன ரகசியம்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள மீனா தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் கதாநாயகியாக மட்டுமல்லாமல், குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்த மீனா, 1990-களில் தொடர்ந்து வெற்றி பெற்றதால், முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். சமீபத்தில் இவர் மோகன்லாலுடன் இணைந்து நடித்த த்ரிஷ்யம் 3 திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. டிவி நிகழ்ச்சிகளில் தனது பழைய சினிமா அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட மீனா ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார். நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து பேசிய மீனா, அவர் தன்னை எப்போதும் “பொம்மை” என்றுதான் அழைப்பார் என்று குறிப்பிட்டுள்ளார். மீனா கதாநாயகியாக நடித்த பல திரைப்படங்களில் கவுண்டமணி முக்கியமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மீனாவின் அழகான நடிப்பும், கவுண்டமணியின் நகைச்சுவை டைமிங்கும் பல காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைத்தன. குறிப்பாக 90-களின் திரைப்படங்களை ரசித்த ரசிகர்களுக்கு, அந்த காலகட்டத்தின் நடிகர்கள் மற்றும் நகைச்சுவை கலைஞர்களின் கூட்டணி இன்னும் மறக்க முடியாத நினைவாகவே உள்ளது. சினிமாவில் பல ஆண்டுகள் பயணித்துள்ள மீனா, தனது திரைப்பயணத்தில் சந்தித்த நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து அவ்வப்போது சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், “கவுண்டமணி என்னை பொம்மை என்றுதான் கூப்பிடுவார்” என்று கூறியுள்ளார். மேலும், தாய்மாமன் படத்தில் சத்யராஜ், மாமா இந்த பொம்மை எனக்கு வேண்டும் என்று மீனாவை காட்டி சொல்ல, அதற்கு கவுண்டமணி அவள் அப்பன்கிட்ட கேட்டு வாங்கி தருகிறேன் என்று கூறியிருப்பார். கவுண்டமணி தன்னை பொம்மை என்று அழைப்பதால் தான் இந்த காட்சியை வைக்கப்பட்டது என்று மீனா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இவர் என்னை பொம்மை என்று தான் அழைப்பார், அதுக்காக படத்தில் ஒரு சீனே இருக்கு: பிரபல நடிகர் பற்றி மீனா சொன்ன ரகசியம்
PulseNews சுருக்கம்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்துள்ள அவர், நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

படப்பிடிப்பு தளங்களில் தன்னை கவுண்டமணி எப்போதும் "பொம்மை" என்றுதான் அழைப்பார் என்று மீனா தெரிவித்துள்ளார். அவர் தன்னை அவ்வாறு அழைப்பதை மையமாக வைத்தே 'தாய்மாமன்' படத்தில் சத்யராஜ் மீனாவைச் சுட்டிக்காட்டி பொம்மை வேண்டும் என்று கேட்க, கவுண்டமணி அதற்குப் பதிலளிப்பது போன்ற நகைச்சுவை காட்சி படமாக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema