"வேலை வாங்கித்தரேன்" 30 பெண்களுடன் உல்லாசம்.. செல்போனில் வீடியோ.. இளைஞரின் திடுக்கிடவைக்கும் செயல்.!
இளைஞர்கள், பெண்களை ஏமாற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போலி அடையாளம்: கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா மாவட்டத்தில் வசித்து வருபவர் ஈரண்ணா படிகர். இவர் டிப்ளமோ பயின்று முடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலியான கணக்கு தொடங்கியவர், தன்னை பெங்களூரில் உள்ள இஸ்ரோவில் அதிகாரியாக காண்பித்துக்கொண்டுள்ளார். இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியில் துண்டு துண்டாக மிதந்த பெண்ணின் சடலம்... சேலத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.! வேலை ஆசை: மேலும், இஸ்ரோவில் பணி வேண்டும் என ஆசைப்படுபவர்கள், தன்னை தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்து இருக்கிறார். இதனைக்கண்ட பல இளம்பெண்கள், வாலிபர்கள் இவரை தொடர்புகொள்ள, இளைஞர்களிடம் இருந்து பல லட்சம் பணம் வாங்கி இருக்கிறார். மேலும், 30 க்கும் மேற்பட்ட பெண்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அவர்களை தனது வலையில் வீழ்த்தி உல்லாசமாகவும் இருந்துள்ளார். கெடுபிடி: பணம் வாங்கிய ஈரண்ணா வேலை வாங்கி கொடுக்காததால், இளைஞர்கள் பலரும் அவரிடம் கேட்டுள்ளனர். இதனால் இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கிய ஈரண்ணா, செல்போன் நம்பரையும் மாற்றி இருக்கிறார். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண்கள், வாலிபர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆபாச படங்கள்: புகாரை ஏற்ற காவல்துறையினர் ஈரன்னாவை கைது செய்த நிலையில், அவரின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, அதில் பல பெண்களின் ஆபாச விடீயோக்களும் இருந்துள்ளது. பல நபர்களிடம் கடன் வாங்கிய தொகையை செலுத்த இவ்வாறான மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். இதையும் படிங்க: செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை? ஜன்னல் வழியே ஏறிக்குதித்து வடமாநில தொழிலாளி கொடூரம்.!

கர்நாடக மாநிலம் விஜயபுராவைச் சேர்ந்த டிப்ளமோ பட்டதாரி ஈரண்ணா படிகர் என்பவர், இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கை தொடங்கி தன்னை பெங்களூரு இஸ்ரோ அதிகாரி என்று கூறி பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். இஸ்ரோவில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி 30 பெண்களுடன் நெருக்கமாக பழகி, அந்த காட்சிகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்த மோசடி குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலை வாய்ப்பு தருவதாக கூறி பெண்களை ஏமாற்றி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞரின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.