PulseNews
சினிமா

'சினிமா, டாஸ்மாக் துறைகளில் ஒயிட் மனி ஊழல்': ஆதவ் அர்ஜுனா பேசியதும் கொந்தளித்த தி.மு.க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, கடந்த ஆட்சியில் சினிமா மற்றும் டாஸ்மாக் துறைகள் மூலமாக 'ஒயிட் மனி' ஊழல் உருவாக்கப்பட்டதாகப் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கடந்த ஆட்சியில், சினிமா மற்றும் டாஸ்மாக் மூலம் ‘ஒயிட் மனி’ ஊழலை உருவாக்கினார்கள்” என்று பேசினார். இதற்கு தி.மு.க- உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பியதால், “நான் யார் பேரையும், எந்த நிறுவனத்தையும் குறிப்பிடவில்லை” என்று ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார். ஆனாலும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமலியின் ஈடுபட்ட நிலையில், அதிருப்தி அடைந்த துணை சபாநாயகர், இருக்கையில் இருந்து எழுந்து தி.மு.க உறுப்பினர்களை எச்சரித்தார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமச்சர் விஜய் தலைமையில் த.வெ.க அரசின் புதிய சட்டப்பேரவையில், காரசாரமான விவாதக்களும் சுவாரசியமான நிகழ்வுகளும் சட்டமன்ற உறுபினர்களின் நகைச்சுவையான பேச்சுகளும் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (31.08.2026) நடைபெற்ற விவாதத்தின்போது பொதுப்பணித் துறை மற்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “ஊழலில் இரண்டு ஊழல் என்று சொல்வேன். ஒன்று இந்த சுரங்கம், மணல் எடுக்கிறது ‘பிளாக் மனி’ (கருப்புப் பணம்) ஊழல். ‘ஒயிட் மனி’ என்று சொல்லி ஒரு ஊழலை உருவாக்கினார்கள். சினிமா துறை. இன்னொன்று லிக்கர் டிபார்ட்மெண்ட்... டாஸ்மாக்.” என்று பேசிக்கொண்டிருந்தபோது தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார். இதனால், சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சினிமா என்று தானே சொன்னேன். நான் யார் பெயரையும் சொல்ல வில்லையே. யாரையும் சொல்லவில்லை, எந்த நிறுவனத்தின் பெயரையும் சொல்லவில்லை.” என்று விளக்கம் அளித்தார். ஆனால், தி.மு.க உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது துணை சபாநாயகர் ரவிசங்கர், “அமைச்சர் பேசி முடிக்கட்டும். பேசி முடிக்கட்டும்... அமைச்சர் பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் பேசியதற்கு பிறகு உங்களுடைய கருத்தை ஜனநாயககப்பூர்வமாக தெரிவியுங்கள். நான் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் கேளுங்கள்.” என்று கூறினார். ஆனாலும், தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டதால், கோபம் அடைந்த துணை சபாநாயகர் ரவிசங்கர், “முதலில் அவையின் விதிகளைப் பின்பற்றக் கற்றுக்கொள்ளுங்கள்.” என்று கூறி அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'சினிமா, டாஸ்மாக் துறைகளில் ஒயிட் மனி ஊழல்': ஆதவ் அர்ஜுனா பேசியதும் கொந்தளித்த தி.மு.க
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, கடந்த ஆட்சியில் சினிமா மற்றும் டாஸ்மாக் துறைகள் வழியாக 'ஒயிட் மனி' ஊழல் நடைபெற்றதாக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார். அமைச்சரின் இந்த கருத்து சட்டமன்றத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இது அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema