PulseNews
சினிமா

Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?

பிரபல நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் காட்டமாக பதிவிட்ட ஸ்டோரிக்கு பின்னால் நடிகை குட்டி பத்மினி அளித்த நேர்காணல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை

த்ரிஷா தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாவார். இவருக்கும் தமிழக முதலமைச்சர் விஜய்க்கும் இடையே உறவு இருப்பதாக கடந்த சில மாதங்களாவே பேசப்பட்டு வருகிறது. விஜய் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவகாரத்து மனுவில் பெயர் குறிப்பிடாமல் நடிகையுடன் உறவில் இருந்தார் என தெரிவித்திருந்தார். அது த்ரிஷா தான் என பலரும் கூறி வந்தார்கள். ஆனால் முதலமைச்சர் விஜய், த்ரிஷா ஆகிய இருவரின் தரப்பும் அதனை உறுதி செய்யவில்லை. அதேசமயம் இருவரும் ஒரு திருமண நிகழ்வில் ஒன்றாக கலந்துக் கொண்டார்கள். மேலும் விஜயின் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் த்ரிஷா வருகை தந்தது போன்றவையும் நடந்தது.

இன்ஸ்டாவில் காட்டமான பதிவு

இப்படியான நிலையில் தொடர்ச்சியாக அரசியல் விவகாரங்களில் முதலமைச்சர் விஜயை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவர்கள் நடிகை த்ரிஷாவையும் உள்ளே இழுத்து வருகின்றனர். அப்படியாக சமீபத்தில் த்ரிஷா பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். மேலும் நயினார் நாகேந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.பாரதி, ஆர்.பி.உதயகுமார் என பலரும் விஜய் விவகாரத்தில் த்ரிஷாவையும் இழுத்து பேசியது கண்டனத்தைப் பெற்றது.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த வயதில் இப்படியெல்லாம் நாடகம் போடுவது வெட்கக்கேட்டானது. பணம் சம்பாதித்து, அமைதியான வாழ்க்கை வாழுங்கள் என த்ரிஷா தெரிவித்திருந்தார். அவர் யாரை சொல்கிறார் என புரியாமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த விஷயத்தில் நடிகை குட்டி பத்மினி அளித்த நேர்காணல் தான் காரணம் என இணையத்தில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

குட்டி பத்மினி சொன்னது என்ன?

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் குட்டி பத்மினி அளித்த அந்த நேர்காணலை ஒளிபரப்பாகியுள்ளது. அதில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி குடும்ப திருமண விழாவுக்கு விஜயும், த்ரிஷாவும் சேர்ந்தது வந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, அர்ச்சனா கல்பாத்திக்கு இருவரும் நல்ல நண்பர்கள். அப்படியிருக்கும்போது இரண்டு பேர் சேர்ந்து வந்ததை நீங்கள் ஏன் தவறாக பார்க்கிறீர்கள். சமூகம் தவறாக பார்த்தால், அவர்களுக்கு பயந்து வாழ முடியுமா?.. விஜய் வெளிப்படையாகவே இந்த விஷயத்தில் இருந்தது எனக்கு மகிழ்ச்சி தான். நான் ஒரு மனிதன் தான். எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்கிறேன் என நினைக்கிறார். முதலமைச்சராகி விட்டால் தனிப்பட்ட வாழ்க்கையே ஒருவருக்கு இல்லை என ஆகி விடுமா?

பெண்களுடைய அன்பு விஜய்க்கு இருக்கிறது. அது தேர்தல் முடிவுகளில் நன்றாகவே தெரிந்தது. அவர்கள் யாரும் விஜய் - த்ரிஷா உறவை தவறாக பார்க்கவில்லை. நாட்டுக்கு என்ன நடக்கிறது என பாருங்கள். அவர் கோட் சூட் போட்டாரு, வேட்டி கட்டினார் என ஏன் பார்க்கிறீர்கள் என புரியவில்லை என குட்டி பத்மினி தெரிவித்தார்.

இரண்டு பேரும் லவ் பண்ணாங்க

தொடர்ந்து பேசிய அவர், “இப்போது விஜய் - த்ரிஷா இடையே என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒரு காலக்கட்டத்தில் விஜய், த்ரிஷா இடையே ரொம்ப நல்ல அன்பு இருந்தது. இரண்டு பேரும் மனதார நேசித்தார்கள். அது அவர்கள் இருவரும் அறிமுகமான கில்லி பட காலக்கட்டம். இந்த சம்பவம் எனக்கு நன்றாக தெரியும். ஆனால் விஜய்-த்ரிஷா விஷயத்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எதிர்த்தார். அதனால் விஜய்க்கு சங்கீதாவை திருமணம் செய்து வைத்தார். இருவரின் வாழ்க்கை வேறு மாதிரி சென்று விட்டது.

விஜய், சங்கீதா பிரிய த்ரிஷா தான் காரணம் என சொல்வதை என்னால் ஏற்க முடியாது. திரும்ப த்ரிஷா விஜயுடன் லியோ, கோட் படத்தில் நடித்தார். விஜய், சங்கீதா பிரிந்தே 5, 6 ஆண்டுகளாகி விட்டது. எனினும் த்ரிஷாவை ஏன் இழுக்கிறார்கள் என தெரியவில்லை. ஒரே மேடையில் விஜய், த்ரிஷா என இருவரும் சேர்ந்து போனதை தவறாக பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை என குட்டி பத்மினி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.பி.உதயகுமார் சர்ச்சை பேச்சு

அதேசமயம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோவில் தொடர்ந்து அரசு பதவியில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி த்ரிஷா எப்போது துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்பதைத் தமிழகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என கேள்வி எழுப்பி விமர்சித்திருந்தார். ஒருவேளை இதனை த்ரிஷா குறிப்பிட்டு பேசுகிறாரா என தெரியாமல் தமிழ் திரையுலகம் குழம்பி போயிருக்கிறது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
PulseNews சுருக்கம்

நடிகர் விஜய்க்கும் நடிகை த்ரிஷாவிற்கும் இடையே காதல் இருப்பதாக நடிகை குட்டி பத்மினி அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்த தகவல்கள் இத்தகைய வதந்திகளுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை த்ரிஷா காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். குட்டி பத்மினியின் இந்த பேட்டியால் த்ரிஷா மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema