பிரபல நடிகருடன் ஜோடி; மலையாளத்தில் எண்ட்ரி கொடுக்கும் ருக்மிணி வசந்த்!
கன்னடத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘பீர்பால் டிரெயாலஜி’ படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி ‘சப்த சாகரடாச்சே எல்லோ – சைட் ஏ’ மற்றும் ‘சப்த சாகரடாச்சே எல்லோ – சைட் பி’ படம் மூலம் பிரபலமானவர் ருக்மிணி வசந்த். கன்னடத்தைத் தாண்டி இந்தி மற்றும் தெலுங்கில் தலா ஒரு படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதி நடித்த ‘ஏஸ்’ படம் மூலம் அறிமுகமாகி சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் கைவசம் டாக்ஸிக்(கன்னடம் & ஆங்கிலம்), டிராகன்(தெலுங்கு) உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. இதுவரை தென்னிந்திய மொழிகளில் மலையாளத்தைத் தவிர்த்து மற்ற மொழி படங்களில் அறிமுகமான இவர் தற்போது மலையாள சினிமாவிலும் அறிமுகமாகிறார். அங்கு நிவின் பாலி நடிக்கும் அவரது 51வது படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தைப் பிரபலமான மலையாளத் திரைப்படமான 'ஜெயா ஜெயா ஜெயா ஜெயா ஹே' -வின் எழுத்தாளர்களில் ஒருவரான நாஷித் இயக்குகிறார். 'சார்லி' மற்றும் 'நாயாட்டு' போன்ற படங்களைத் தயாரித்து இயக்கிய மார்ட்டின் பிரக்காட் தயாரிக்கிறார். இப்படத்தில் இணைந்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ருக்மிணி வசந்த், “நீண்ட காலமாகத் தூரத்திலிருந்து ரசித்த ஒரு இடத்தில் இப்போது நேரில் இருப்பது மிகவும் சிறப்பான ஒரு உணர்வைத் தருகிறது. அந்த இடத்தின் ஒரு சிறிய பகுதியாக இருப்பது எனக்கு ஒரு ஸ்பெஷல் அறிமுகம்” எனக் குறிப்பிட்டுள்ளார். View this post on Instagram

2019-இல் 'பீர்பால் டிரெயாலஜி' படம் மூலம் அறிமுகமான ருக்மிணி வசந்த், 'சப்த சாகரடாச்சே எல்லோ' படத்தின் இரு பாகங்கள் மூலம் புகழ்பெற்றார். கன்னடம் தவிர இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.
தற்போது கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகும் 'டாக்ஸிக்' மற்றும் தெலுங்கின் 'டிராகன்' படங்களில் நடித்து வரும் அவர், முதன்முறையாக மலையாளத் திரையுலகிலும் கால்பதிக்கிறார். இதில் அவர் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.