கச்சிதமாக காய் நகர்த்தும் CM விஜய்! டேபிளில் இருக்கும் அந்த 3 ஃபைல்கள்... இடைத்தேர்தல் தேதி அறிவித்ததும் வெளிவரும் ரகசியம்! கசிந்த சீக்ரெட்...!!!
தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தமிழக வெற்றிக் கழகம் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு தயாராகி வருகிறது. சட்டசபையில் கட்சியின் பலத்தை உயர்த்துவது ஒருபுறம், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொள்வது மறுபுறம் என ஆளும் தரப்பு கணக்குகளை வகுத்து வருகிறது. இதற்கிடையே முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் மேஜையில் உள்ளதாக கூறப்படும் 3 முக்கிய கோப்புகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் 114 எம்.எல்.ஏக்கள் தற்போதைய நிலையில் தவெகவுக்கு 107 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. காலியாக உள்ள 7 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால், அதன் எண்ணிக்கை 114 ஆக உயரும். இதனால் தனிப்பெரும்பான்மைக்கு மேலும் 4 இடங்கள் மட்டுமே தேவைப்படும். இதையும் படிங்க: மேலும் 5 அதிமுக MLA-க்கள் ராஜினாமா? செப்.8-ல் வெடிக்கப்போகும் பூகம்பம்...! அதிர்ச்சியில் அல்லேலப்படும் எடப்பாடி!!! கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளின் துணையுடன் ஆட்சியை நடத்தி வரும் நிலையில், இடைத்தேர்தல் முடிவு தவெகவுக்கு அரசியல் ரீதியாக முக்கியமானதாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த தேர்தல் மூலம் அரசுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை வெளிப்படுத்த முடியும் என்பதால், 7 தொகுதிகளையும் கைப்பற்ற ஆளும் தரப்பு தீவிர கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மேஜையில் 3 முக்கிய கோப்புகள் இந்த சூழலில், நிதித்துறை ஆய்வு தொடர்பான 3 முக்கிய கோப்புகள் ஆதாரங்களுடன் தன் மேஜையில் இருப்பதாகவும், உரிய நேரத்தில் அவற்றை வெளியிடுவதாகவும் முதலமைச்சர் விஜய் சட்டசபையில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நேரத்தில் அந்த ஆவணங்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. அந்த கோப்புகள் வெளிவந்தால், எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசின் அரசியல் தாக்குதல் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தவெக தரப்பில் கணக்கு போடப்படுகிறது. அதே நேரத்தில், ஆவணங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உரிய ஆதாரங்களுடன் நிரூபிப்பது அரசுக்கு முக்கிய சவாலாக இருக்கும். இதனிடையே, இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், தேர்தல் தேதியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் அடுத்தகட்ட முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளுடன் நேரடி அரசியல் மோதல்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் 7 தொகுதிகளிலும் களப்பணிகளை வேகப்படுத்த தவெக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மறுபுறம், அரசின் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பதும் அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விஜய் அரசு எதிர்கொள்ளும் முதல் முக்கிய இடைத்தேர்தல், வெறும் தொகுதி வெற்றி-தோல்வியைத் தாண்டி அரசியல் பலத்தை அளவிடும் போட்டியாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. இதையும் படிங்க: என்னேன்ன நடக்குது இங்க... உட்கார மாட்டோம்! ஆவேசம் காட்டிய எடப்பாடி.. சபாநாயகர் எச்சரிக்கை! வைரலாகும் வீடியோ...!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத சூழலில், தமிழக வெற்றிக் கழகம் தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் கட்சியின் பலத்தை அதிகரிப்பதையும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைச் சமாளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் மேஜையில் இருக்கும் 3 முக்கியக் கோப்புகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில், கட்சியின் பலம் 114 எம்.எல்.ஏக்களாக உயரும் என்பதால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.