PulseNews
சினிமா

லேப்டாப் யூஸ் பண்ணும்போது கவனம்.. சார்ஜ் போடும்போது விபரீதம்.. +1 மாணவர் பரிதாப பலி.!

மின்சாதன பொருட்களை இயக்கும்போது கவனமாக செயல்பட வேண்டும். பள்ளி மாணவர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கற்குழாய் சாலை பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவர் பெயிண்டர் ஆவார். செந்திலின் மனைவி கவிதா. தம்பதிகளுக்கு சீனிவாசன் என்ற 15 வயதுடைய மகனும், ஜீவா, ரித்தி என 3 மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் ஜீவா திருவள்ளூர் மணவாளநகரில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். இதையும் படிங்க: அடுத்தடுத்து பரவும் டெங்கு.. பீதியில் மக்கள்.. சிறார்களை கவனமாக பார்த்துக்கோங்க மக்களே.! மடிக்கணினி: இந்நிலையில், ஜீவா தனது நண்பரின் லேப்டாப்பை வீட்டுக்கு வாங்கி வந்து கேம் விளையாடிக்கொண்டு இருந்தார். தொடர்ந்து சார்ஜ் காலியானதால், லேப்டாப்பை சார்ஜ் போட சென்றுள்ளார். அச்சமயம், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உயிரிழப்பு: சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. பின் இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையும் படிங்க: உயிரைப்பறித்த கொசு மருந்து? கோவையில் நடந்த சோகம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் விபரீதம்.!

Tamil Spark14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
லேப்டாப் யூஸ் பண்ணும்போது கவனம்.. சார்ஜ் போடும்போது விபரீதம்.. +1 மாணவர் பரிதாப பலி.!
PulseNews சுருக்கம்

திருவள்ளூர் மாவட்டம் கற்குழாய் சாலை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருடைய 15 வயது மகன் ஜீவா, மணவாளநகரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

லேப்டாப்பிற்கு சார்ஜ் போட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் மாணவர் ஜீவா உயிரிழந்தார். மின்சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema