நடிகை மமிதா பைஜூ மருத்துவமனையில் அனுமதி!
இளம் நடிகை மமிதா பைஜூ பேக் டூ பேக் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த மாதம் சூர்யாவுடன் நடித்த ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மற்றும் நிவின் பாலியுடன் நடித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக வசூலில் இரண்டு படங்களும் ரூ.200 கோடிக்கி மேல் வசூலித்துள்ளது. மேலும் இந்த இரு படங்களுக்கு முன்பு வெளியான முதல்வர் விஜய்யுடன் அவர் நடித்த ‘ஜனநாயகன்’ படமும் ரூ. 200 கோடி வசூலை கடந்திருந்தது. இப்படி ஏறுமுகத்தில் இருக்கும் மமிதா ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருந்தார். ஆனால் தற்போது உடல் நிலைக்காரணமாக அவர் கலந்து கொள்ள முடியாமல் போகியுள்ளது. இதனை மமிதா அந்த நிகழ்ச்சி நிறுவனத்துக்கு வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார் அந்த வீடியோவை அந்த நிகழ்ச்சி நிறுவனம் தற்போது அவர்களது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மமிதா வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியதாவது, “துரதிர்ஷ்டவசமாக, நாம் திட்டமிட்ட தேதியில் என்னால் அங்கு வர இயலாது. நான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். வேறு ஏதேனும் வழி இருந்திருந்தால், நான் நிச்சயமாக வந்திருப்பேன். இருப்பினும், மருத்துவர்கள் எனக்கு முழுமையான ஓய்வு தேவை என்று அறிவுறுத்தியுள்ளனர். அதிக காய்ச்சல், கடுமையான உடல் வலி, ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா-வால் பாதிக்கப்பட்டுள்ளதால், எந்தச் சூழலிலும் பயணம் செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். ஆஸ்திரேலியாவுக்கு வர முடியாமல் போனது எனக்கு ஒரு பெரிய இழப்பு. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் மிகவும் விரும்பினேன். ஆனால் எனது உடல்நிலை காரணமாக வர முடியாமல் போனதற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மற்றொரு சந்தர்ப்பத்தில் என்னால் ஆஸ்திரேலியாவிற்கு வர முடியும் என்று நம்புகிறேன்” என்றுள்ளார். மமிதாவின் இந்த வீடியோவை தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செப்.5ஆம் தேதி நடக்கவிருந்த நிகழ்ச்சியை தள்ளிவைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியான வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் இளம் நடிகை மமிதா பைஜூ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சூர்யாவுடன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, நிவின் பாலியுடன் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ மற்றும் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ ஆகிய மூன்று படங்களும் தலா ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
திரையுலகில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வரும் மமிதா, ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் இருந்தபோது இந்த எதிர்பாராத உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.