பாஜகவிலிருந்து விலகிய நடிகர்; காரணம் இது தானா?
பிரபல திரைப்பட நடிகரும், கேரள பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் ஆலப்புழாவில் உள்ள கணச்சுகுளங்கரை தேவி கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேவன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகள் தத்துவங்களை உள்ளடக்கிய அரசியலையே தான் விரும்புவதாக அவர் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவில் பணியாற்றிய போதும் அந்த லட்சியங்களை அடைய முடியவில்லை. தன்னுடைய பாதை வேறு என்பதை உணர்ந்ததால், ராஜினாமா செய்வது என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ’கேரள மக்கள் கட்சி’யைத் (கேரள பீப்பிள்ஸ் பார்ட்டி) தொடங்கி நடத்தி வந்தார். பின்னர், 2021 ஆம் ஆண்டு இவர் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவில் பணியாற்றி வந்த தேவன், தற்போது பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது பாஜகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேவன் தனது ராஜினாமா குறித்தான முடிவைக் கோயில் நிகழ்ச்சியில் அறிவித்துள்ளது பற்றி மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இது போன்ற முடிவுகளை அறிவிப்பதற்கு இந்த மேடை உகந்தது அல்ல என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கேரள மாநில பாஜகவின் துணைத் தலைவராக இருந்த பிரபல திரைப்பட நடிகர் தேவன், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜகவில் பணியாற்றி வந்தாலும், தான் விரும்பிய ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலை முன்னெடுக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆலப்புழாவில் உள்ள கணச்சுகுளங்கரை தேவி கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், தனது அரசியல் பாதை வேறு என்பதை உணர்ந்ததாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது இலக்குகளை அடைய முடியாத சூழலில் இத்தகைய முடிவை அவர் எடுத்துள்ளார்.