PulseNews
சினிமா

'வாடி என் கப்பக் கெழங்கே...' இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? கங்கை அமரன் உடைத்த ரகசியம்

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1981-ம் ஆண்டு வெளியான படம் அலைகள் ஓய்வதில்லை. இயக்குனர் மணிவண்ணனின் கதையம்சத்தில் உருவான இந்த படத்தின் மூலம் கார்த்திக் – ராதா என இரு நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினர். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து இருவருக்கும் பட வாய்ப்பு குவிந்து வந்தது. குறிப்பாக நடிகை ராதாவுக்கு இந்த படம் பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அலைகள் ஒய்வதில்லை படத்தை தொடர்ந்து, பாரதிராஜாவின் இயக்கத்தில் டிக்டிக்டிக், அதிசய பிறவிகள், கோபுரங்கள் சாய்வதில்லை, பாயும் புலி என பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த நிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், மோகன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் ராதா. அதேபோல் பாரதிராஜ இயக்கத்தில் வெளியான முதல் மரியாதை திரைப்படத்தில், சிவாஜியுடன் இணைந்து நடித்த ராதாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்படடது. 1981-ம் ஆண்டு சினிமவில் அறிமுகமான ராதா, 1991-ம் ஆண்டு தனது சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு திருமண வாழ்க்கையில் புகுந்தார். 1991-ம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்துகொண்ட ராதாவுக்கு கார்த்திகா, துளசி, உட்பட 3 பிள்ளைகள் உள்ளனர். தற்போது ராதா சினிமாவில் இல்லை என்றாலும், அவரைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் இசையமைப்பாளரும் இயக்குனருமாக கங்கை அமரன் ஒரு ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். ராதாவின் அறிமுக படமான அலைகள் ஒய்வதில்லை படத்தை இளையராஜா கங்கை அமரனின் சகோதரர் ஆர்,டி.பாஸ்கர் தான் தயாரித்திருந்தார். நாயகியாக அம்பிகாவின் தங்கை ராதா தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று கங்கை அமரினிடம் கூறியுள்ளனர். அவர் கேரளாவில் இருந்து வருவதாக கூறியதால், அவரை வரவேற்க என்ன செய்யலாம் என்று யோசித்த கங்கை அமரன், கேரளாவில் ரொம்ப ஃபேமஸான உணவாக இருக்கும் கப்பக்கிழங்கு என்ற வார்த்தையை வைத்து பாடலை எழுதியுள்ளார். அவர் எழுதிய ‘வாடி என் கப்பக்கிழங்கே’ என்ற பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் ஒரு பாடலாக இருக்கிறது. இந்த பாடலை சுந்தர்.சி நதியா நடிப்பில் வெளியான சண்ட படத்தில் ரீமேக் செய்யப்பட்டு அப்போதும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'வாடி என் கப்பக் கெழங்கே...' இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? கங்கை அமரன் உடைத்த ரகசியம்
PulseNews சுருக்கம்

1981-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'அலைகள் ஓய்வதில்லை' திரைப்படம் மூலம் கார்த்திக் மற்றும் ராதா ஆகியோர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்கள். மணிவண்ணனின் கதைக்களத்தில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் படத்தில் நடித்த நடிகர், நடிகையருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன.

குறிப்பாக நடிகை ராதாவிற்கு இப்படம் ஒரு சிறந்த அறிமுகமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, பாரதிராஜாவின் இயக்கத்தில் டிக் டிக் டிக், அதிசய பிறவிகள் மற்றும் கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற படங்களில் ராதா நடித்தார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema