PulseNews
சினிமா

Actor Yash: விஜயின் அர்ப்பணிப்பு.. மாற்றம் கொடுத்த தமிழ்நாட்டு மக்கள்.. நடிகர் யஷ் பாராட்டு!

தமிழக முதலமைச்சர் விஜயிடம் இருந்து நிறையக் கற்றுக் கொண்டோம் என டாக்ஸிக் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் யஷ் தெரிவித்துள்ளார்.

கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள படம் “டாக்ஸிக்”. இந்த படத்தை பெண் இயக்குநரும், நடிகையுமான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் யஷ் ஹீரோவாக நடிக்க நயன்தாரா, கியாரா அத்வானி,ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் என 5 ஹீரோயின்கள் இடம் பெற்றுள்ளனர். இப்படம் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய யஷ், “கேஜிஎஃப் படத்திற்கு எனக்கு தமிழ் மக்கள் வழங்கிய அன்பையும் ஆதரவையும் இந்த டாக்ஸிக் படத்துக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் இந்த படம் வெறும் கமர்ஷியல் படமாக மட்டுமல்லாமல் பல உண்மையான தருணங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு படைப்பு” எனவும் புகழாரம் சூட்டினார்

அதேசமயம் ரசிகர்களின் இந்த அன்புக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ரத்தத்தின் ரத்தங்களே என எம்ஜிஆர் சொல்லி விட்டார். என்னை வாழ வைத்த தெய்வங்களே என ரஜினி சொல்லி விட்டார். என் நெஞ்சில் குடியிருக்கும் என முதலமைச்சர் விஜய் சொல்லி விட்டார். அதனால் என்னை தத்தெடுத்த தமிழ் மக்களே என சொல்கிறேன். அதுதான் உண்மையும் என நடிகர் யஷ் நெகிழ்ச்சியாக பேசினார்.

தொடர்ந்து தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா பற்றி பேசும்போது, “இந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கு என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் கேவிஎன் நிறுவனம் தயாரித்த ஜனநாயகன் திரைப்படம் ஆன்லைனில் கசிந்தபோது நான் உட்பட அனைவரும் இது முற்றிலுமாக முடிந்துவிட்டது என்று நினைத்தோம். ஒரு தயாரிப்பாளருக்கு அது எவ்வளவு வேதனையானது என்று எனக்குத் தெரியும். ஆனால், ஒரு நல்ல படைப்பை உருவாக்க வேண்டும் என்ற சரியான நோக்கத்துடன் வந்த தளபதி விஜய் மீது தமிழ் மக்கள் காட்டிய அன்பு அபாரமானது. அதேபோல் வெங்கட நாராயணாவும் எப்போதும் விஜயைப் பற்றியும் அவரின் உழைப்பு பற்றியும் பேசிக்கொண்டே இருப்பார் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நெகிழ்ச்சியுடன் பதிலளித்த யஷ், “நாங்கள் அவரிடமிருந்து உண்மையிலேயே நிறைய கற்றுக்கொண்டோம். அவரைப் போற்றுகிறோம். அவர் சம்பாதித்த அன்பு வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால்தான் மக்கள் அவருக்கு இந்தப் பதவியைக் கொடுத்திருக்கிறார்கள். அவர் மிகவும் ஒழுக்கமாகவும் அர்ப்பணிப்புடனும் இருப்பதை என்னால் காண முடிகிறது. விஜய் சார் தமிழக மக்களுக்கு அன்பைத் திருப்பிக் கொடுக்கும் கட்டத்தை எட்டியுள்ளார். அவரின் இந்த பயணத்திற்கு என் வாழ்த்துகள்” என கூறினார்.

மேலும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் காட்டிய முற்போக்கான மாற்றம் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு நல்ல உதாரணம் எனவும் பாராட்டினார்.

Abp News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Actor Yash: விஜயின் அர்ப்பணிப்பு.. மாற்றம் கொடுத்த தமிழ்நாட்டு மக்கள்.. நடிகர் யஷ் பாராட்டு!
PulseNews சுருக்கம்

'டாக்ஸிக்' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் யஷ், தமிழக முதலமைச்சர் விஜயின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டியுள்ளார். அவரிடம் இருந்து தான் நிறையக் கற்றுக்கொண்டதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகிறது. யஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema