மலையாள திரையுலகில் என்ட்ரி கொடுக்கும் ருக்மிணி வசந்த்... யாருக்கு ஜோடியாக தெரியுமா?
மலையாள சினிமா என்ட்ரி: கன்னட முன்னணி நடிகை ருக்மிணி வசந்த், நிவின் பாலியின் 51வது மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம்; ‘சார்லி’, ‘நையாட்டு’ தயாரிப்பாளர் மார்ட்டின் பிரக்கத், ‘ஜய ஜய ஜய ஜய ஹே’ எழுத்தாளர் நாஷித் இணையும் சிறப்பு கூட்டணி. Malayalam cinema entry: Leading Kannada actress Rukmini Vasanth joins Nivin Pauly’s 51st film, produced by Martin Prakkat and directed by Nashid, marking a notable crossover from Kannada to Malayalam.

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகையான ருக்மிணி வசந்த், மலையாளத் திரைப்பட உலகில் அறிமுகமாகவுள்ளார். நிவின் பாலி நடிக்கும் அவரது 51-வது படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தை 'சார்லி' மற்றும் 'நையாட்டு' படங்களின் தயாரிப்பாளரான மார்ட்டின் பிரக்கத் தயாரிக்கிறார். 'ஜய ஜய ஜய ஜய ஹே' திரைப்படத்தின் எழுத்தாளரான நாஷித் இப்படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது.