PulseNews
சினிமா

விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் தனுஷ் அரசியல் தலைவராக மாறுவதற்காக அனைத்து கட்ட வேலைகளையும் மும்முரமாக செய்து வருகிறார். முதற்கட்ட நடவடிக்கையாக தொகுதி வாரியாக நற்பனி மன்றங்களை அமைக்கிறார். ‘அனைதிந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம்’ என்ற பெயரில் நற்பணி மன்றங்களை அமைக்கவிருக்கின்றனர். இதுதொடர்பான அறிவிப்பை சுப்ரமணியம்சிவா வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனுஷ் இருக்கிறார். பாலிவுட், ஹாலிவுட் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படும் நபராக தனுஷ் திகழ்கிறார். சினிமாவில் நிலைத்திருக்க நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை வெளிக்காட்டி தனக்கான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இந்த இடத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அவர் அரசியலுக்குள் நுழைய முயற்சி எடுத்து வருகிறார். இதற்கான சமிக்ஞை, சமீபத்தில் தனது பிறந்த நாளை முன்னிட்டு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தனுஷ் வெளிப்படுத்தினார்.

தற்போது, அரசியலில் நுழைவதற்கு முதற்கட்டமாக தனது ரசிகர் மன்றங்களை, நற்பணி மன்றங்களாக மாற்றி இருக்கிறார். அதுவும், சட்டமன்றத் தொகுதி வாரியாக நற்பணி மன்றங்களை தொடங்க இருக்கிறார். முதலில், கோவை, கோவை தெற்கு மாவட்ட தலைமைக்கு உட்பட்ட நற்பணி இயக்கங்கள் செயல்படும் தொகுதிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி, கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி, கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, கோவை சூலூர் சட்டமன்றத் தொகுதி, கோவை மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு நற்பணி இயக்கத்தை தொடங்கவும், உறுப்பினர்களை சேர்க்கவும் கோவை மாவட்ட தலைவரை தொடர்பு கொள்ளுமாறு’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
PulseNews சுருக்கம்

நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தொகுதி வாரியாக நற்பணி மன்றங்களை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளார். சுப்ரமணியம் சிவா மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பிற்கு ‘அனைதிந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் தொடக்கமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் நற்பணி இயக்கங்களைத் தொடங்கவும், உறுப்பினர்களைச் சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆர்வமுள்ளவர்கள் அந்தந்த மாவட்டத் தலைவரைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema