வேளாங்கண்ணி மாதா பேராலயத் திருவிழா: திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்!
Velankanni special train: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்க திருவனந்தபுரம் வடக்கு - வேளாங்கண்ணி இடையே ஆகஸ்ட் 29 முதல் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 20 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 20 முதல் தொடங்குகிறது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக திருவனந்தபுரம் வடக்கு மற்றும் வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த ரயில்கள் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் இயக்கப்படும்.
மொத்தம் 20 பெட்டிகளைக் கொண்ட இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. திருவிழாக் காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.