BREAKING: பழம்பெறும் நடிகை செளகார் ஜானகி கவலைக்கிடம்... மருத்துவமனையின் அதிர்ச்சி அறிக்கை..!!!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவாச உதவிக்காக அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சையில் சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌகார் ஜானகியை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை மருத்துவர்கள் தீவிரமாக கவனித்து, தேவையான சிகிச்சைகளை வழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையும் படிங்க: முகத்துல என்ன ஒரு சந்தோஷம்... ஜனநாயகன் படம் பார்க்க செம ஸ்டைலாக ஓடோடி வந்த திரிஷா! வைரலாகும் வீடியோ....!!! மருத்துவமனைக்கு நேரில் சென்ற நாசர் இதனிடையே, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் நடிகர் சவுந்தரராஜா ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். அங்கு சௌகார் ஜானகிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் அவரது தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக எதிர்பார்ப்பு சௌகார் ஜானகியின் உடல்நிலை தொடர்பான அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை விரைவில் காவேரி மருத்துவமனை நிர்வாகத்தால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் மருத்துவமனை தரப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதையும் படிங்க: அம்மாவும், மகனும் மாறி மாறி கொடுத்த டார்ச்சல்... நாத்தனாருக்கு அனுப்பிய கடைசி வாட்ஸ்அப் மெசேஜ்..! மாடல் அழகி தற்கொலை வழக்கில் சிபிஐ திடுக்கிடும் குற்றப்பத்திரிகை..!!!

மூத்த நடிகை செளகார் ஜானகி (94) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுவாச உதவிக்காக அவர் வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார். மருத்துவக் குழுவினர் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.