PulseNews
சினிமா

“டாக்சிக்” - டார்ச்சரா..? அலறும் யாஷ் ரசிகர்கள்.. இந்த குழந்தையா இப்படி? நயனுக்கு 10 வது தோல்வி..

டாக்ஸிக்..... படத்தின் டிரைலெரே ஆபாசமும் வன்முறையும் நிறைந்து காணப்பட்டதால் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது..! இருந்தாலும் கே.ஜி.எப் என்ற மாபெரும் பான் இந்தியா வெற்றிப்படத்திற்கு பின்னர் 4 வருடம் கழித்து வெளியாகும் யாஷ் நடித்த பிரமாண்ட படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஜன நாயகன் படத்தை தயாரித்த கே.வி.என் நிறுவனம் , 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ளதாக கூறப்படும் டாக்ஸிக் திரைப்படம், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் , தமிழ் என உலகெங்கிலும் 12 ஆயிரம் திரையரங்குகளில் 26ந்தேதி காலை வெளியானது. கர்நாடகாவில் யாஷின் ரசிகர்களின் முதல் காட்சிக்கு கட் அவுட் வைத்தும் மேளதாளங்கள் முழங்கவும் ஆட்டம் போட்டு கொண்டாடினர். கோவாவில் இயங்கும் மாபியாக்களை மையமாக கொண்ட இந்த படத்தில் தந்தை ,மகன் என இரு வேடங்களில் யாஷ் நடித்துள்ளார். நாயகிகளாக, நயன்தாரா, கியாரா அத்வானி, காந்தாரா நாயகி ருக்மினி வசந்த், கியூமா குரேஸி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தின் முன் பதிவு எதிர்பார்ப்பு ஏற்றவாறு விறு விறுப்பாக நடந்திருந்த நிலையில் படத்தை பார்த்து வந்த ரசிகர்கள் நொந்து போயுள்ளதாக கதறினர். தமிழகத்தில் டாக்ஸிக் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை, திரையரங்குகளில் விடுமுறை நாள் போல இல்லாமல் காற்று வாங்கியது. அப்படி படம் பார்த்து விட்டு வந்த ஒரு சிலரும் டாக்ஸிக்கை... டார்ச்சர் என எதிர்மறையாக கருத்து தெரிவித்தனர். இந்தி ரசிகர்கள் ஆவலோடு திரையரங்கிற்கு வந்து டாக்ஸிக் படத்தை கண்டு ரசிப்பதாலும், அங்கு பிரீமியம் டிக்கெட் விலை 2000 ரூபாய் என்பதாலும், முதல் நாளில் எளிதாக 100 கோடியை தாண்டி வசூல் சாதனையை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சென்சாரில் A சர்டிபிகேட் கொடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால், குடும்பத்துடன் திரையரங்கிற்கு செல்லும் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க இயலாது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமிகள் இந்த படத்தை பார்க்க அனுமதி இல்லை. இதனால் வரும் நாட்களில் டாக்ஸிக் படம் பெரிய அளவில் வசூலிக்க வாய்ப்பில்லை என்றும் பெரிய டிசாஸ்டராக மாறவாய்ப்புள்ளதாக திரையுலக வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படிபட்ட ஒரு டார்ச்சரான படத்தை எடுத்ததாக விமர்சனத்துக்குள்ளாகி இருக்கும் இயக்குனர் யார் தெரியுமா? பொம்மு குட்டி அம்மாவுக்கு .. பாடலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, வளர்ந்த பின்னர், நளதமயந்தி படத்தில் மாதவன் ஜோடியாக நடித்த கீது மோகன் தாஸ் தான் இந்த படத்தின் இயக்குனர். அதே நேரத்தில் ஒரு காலத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று சூப்பர்ஸ்டாருக்கு இணையாக டைட்டில் கார்டு போட்டுக் கொண்ட நயன்தாராவுக்கு டாக்ஸிக் தொடர்ச்சியாக 10 வது தோல்வி படம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Polimer News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“டாக்சிக்” - டார்ச்சரா..? அலறும் யாஷ் ரசிகர்கள்.. இந்த குழந்தையா இப்படி? நயனுக்கு 10 வது தோல்வி..
PulseNews சுருக்கம்

கே.ஜி.எப் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகர் யாஷ் நடிப்பில் நான்கு ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ள படம் ‘டாக்சிக்’. கே.வி.என் நிறுவனம் சுமார் 500 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் 12 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இருப்பினும், இப்படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த யாஷ் ரசிகர்கள், டிரெய்லரின் உள்ளடக்கத்தைக் கண்டு அதிர்ச்சியும் விமர்சனங்களும் தெரிவித்து வருகின்றனர்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema