திருமண பந்தத்தில் இணைந்த டி.ஜே.பிளாக்; நேரில் வாழ்த்திய சின்னத்திரை பிரபலங்கள்: போட்டோஸ் வைரல்
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமான டி.ஜே.பிளாக் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். அவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியில், குக் வித் கோமாளி, சூப்பர் சிஙக், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில், டைமிக் காமெடி மற்றும் பாடல்களை ஒலிக்க செய்து பிரபலமானவர் டி.ஜே.பிளாக். சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருப்பதற்கு இவரின் டைமிங் பஞ்ச் ஒலிபரப்பும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் மேடையில் ஏறியுள்ள டி.ஜே.பிளாக் ஒருமுறை நீயா நானா நிகழ்ச்சியில் கூட பங்கேற்றிருந்தார், இதனிடையே இதுவரை சிங்கிளாக இருந்த டி.ஜே.பிளாக், தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். டி.ஜே.பிளாக் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றுள்ளது. கடந்த சில நாட்கள் முன்பு என்றென்றும் பற்றிக்கொள்ள எனக்கு மிகவும் பிடித்தமான மனிதருடன் எனது வாழ்வின் மிகச்சிறந்த புதிய பயணத்தைத் தொடங்குகிறேன். இன்னும் 10 நாட்களில் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது ரம்யா என்கிற பெண்ணை அவர் திருமணம் செய்துள்ளார். இருவரின் திருமணம் இன்று சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் நடந்திருக்கிறது. தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ள டி.ஜே. பிளாக், "இனி என்றும் என் துணை பயணியாக... தூர தேசங்களும், ஆண்டுகளும், வானமும் கூட இணைந்தே பயணப்படுவோம்..." என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். View this post on Instagram A post shared by Sudhan Kumar (@djblackchennai) டி.ஜே. பிளாக் திருமணம் முடித்துள்ள பெண் ரம்யா ஒரு மருத்துவர். தான் சென்னை என்றும் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு தற்போது எம்.டி மனநல மருத்துவப் பயிற்சி மருத்துவராக இருப்பதாகவும் ரம்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூசிக் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளில் தனது நகைச்சுவை மற்றும் இசைத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த டி.ஜே. பிளாக் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
அவரது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்தத் தம்பதியருக்குச் சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.