PulseNews
சினிமா

Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?

தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகைகளில் ஒருவர் நடிகை சோனா. தமிழ் சினிமாவில் ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சோனா திரையுலகில் நுழைந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்த நிலையில், அவர் சமீபத்தில் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

ஜாலியா இருந்துட்டேன்:

இந்த 25 ஆண்டுகளில் ஏற்றமும், இறக்கமும் நிறைந்துள்ளது எனது திரையுலகம். சந்தோஷம், வலி அனைத்தும் உள்ள பாதை. இதுவரை நான் இந்த இடத்தில் வந்து இருப்பதற்கு அந்த பாதைதான் காரணம்.

கவர்ச்சியை தேர்வு செய்தால் இப்படி முத்திரை குத்துவார்கள் என்று எனக்கு அப்போது தெரியாது. சமூகத்தில் 20 முதல் 30 வயது வரை அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம். நானும் திரையுலகில் இருப்பதையே மறந்து ஜாலியாக இருந்துவிட்டேன். அதில் ஒரு முத்திரை விழுந்துவிட்டதோ? என்ற எண்ணமும் உள்ளது. தயாரிப்பில் ஈடுபட்டேன். இன்னும் பொறுமையாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. தவறுகளால்தானே சிறந்த மனிதர்களாக மாறுவோம்.

கஸ்தூரிராஜா அடம்:

முதன்முதலில் மளிகை கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது, எதிர்வீட்டில் ஜீவிதா ராஜசேகரன் இருந்தார்கள். அவர்கள் மேனேஜர் வைத்து தினமும் கேட்பார்கள். நான் தினமும் ஓடிவிடுவேன். இது சினிமாவில் இணைவதற்கு 6 மாதத்திற்கு முன்பு ஆகும்.

எனக்கு 14 வயது இருக்கும்போது புரசைவாக்கத்தில் நானும், அம்மாவும் ஷு வாங்கச் சென்றிருந்தோம். அப்போது கஸ்தூரி ராஜா வந்திருந்தார். அவர் அடம்பிடித்தார். எங்கம்மா முடியாது என்றுவிட்டனர்.

வந்தது எப்படி?

ஜீவிதா கேட்கும்போது சூழல் நிறைய மாறிவிட்டது. நான் தனியாக இருந்தேன். குடும்பம் ஏற்கனவே நடுத்தர குடும்பம். அந்த நேரத்தில் மிகவும் மோசமான நிலையில் இருந்தோம். பயத்தால் தவிர்த்தாலும் அவர்கள் தைரியம் அளித்தனர். பொருளாதார சூழலால்தான் வந்தேன். முதல் 5 வருடம் குழப்பத்திலே சென்றுவிட்டது.

மிஸ் தென்னிந்தியாவில் பங்கேற்று அதில் வெற்றி பெற்றேன். அதன்மூலமாகவே பூவெல்லாம் உன் வாசம் படம் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து ஷாஜஹான் கிடைத்தது. இப்போ உள்ள தலைமுறைதான் மாறிவிட்டார்கள். அப்போது இருந்தவர்கள் ஜுனியர் ஆர்டிஸ்ட்டாக இருந்தாலும் கேட்டுவிட்டு போவார்கள். விஜய்யின் மிகப்பெரிய ரசிகை நான்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை, தயாரிப்பாளர்:

47 வயதான நடிகை சோனா 2001ம் ஆண்டு பூவெல்லாம் உன் வாசம் படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானார். பின்னர், ஷாஜஹான், சிவப்பதிகாரம், மிருகம், குசேலன் என பல படங்களில் நடித்தார். மிருகம் படத்திற்கு பிறகு மிகவும் பிரபலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் சோனா நடித்துள்ளார். கடைசியாக தமிழில் பூமர் அங்கிள் என்ற படத்தில் நடித்துள்ளார்.

2010ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான கனிமொழி என்ற படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுடன் இணைந்து தயாரித்திருந்தார். ஆனால், அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. இந்திய திரையுலகின் பிரபலமான நடிகர் தனுஷின் தந்தையான, இயக்குனர் கஸ்தூரி ராஜா மிகவும் பிரபலமான இயக்குனர். 1991ம் ஆண்டு என் ராசாவின் மனசிலே படம் மூலமாக இயக்குனரான அவர் சோலையம்மா, ஆத்தா உன் கோயிலிலே, எட்டுப்பட்டி ராசா, என் ஆசை ராசாவே, துள்ளுவதோ இளமை என பல படங்களை இயக்கியுள்ளார்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
PulseNews சுருக்கம்

தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகை சோனா, ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தனது திரைப் பயணத்தின் வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடும் அவர், சமீபத்தில் யூடியூப் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

கடந்த 25 ஆண்டுகாலத் திரை வாழ்க்கையில் இன்பம் மற்றும் துன்பம் எனப் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளதாக சோனா தெரிவித்துள்ளார். இதுவரை தான் கடந்து வந்த பாதை மகிழ்ச்சியும் வலியும் கலந்தது என்றும், இந்த இடத்திற்கு வருவதற்குத் தான் செய்த பயணங்கள் குறித்தும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema