PulseNews
சினிமா

நடிகையிடம் சட்டென பாய்ந்த நாய்; பட விழாவில் பரபரப்பு

நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை சொல்லும் படமாக பாலிவுட்டில் உருவாகியுள்ள படம் ‘ஓ மை டாக்’. இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு திரையிடல் மும்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நாய்கள் விரும்பி நடிகை ரவீனா டண்டன் கலந்து கொண்டார். பல்வேறு நாய்களும் வரவழைக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் நடந்த ரெட் கார்பெட்டில் நாய்களுடன் நேரம் செலவிட்ட அவர், புகைப்படக் கலைஞர்களுக்காக நாய்களுடன் போஸ் கொடுத்திருந்தார். அப்போது ஒரு நாயுடன் உட்கார்ந்த படி போஸ் கொடுத்த அவர் எழுந்திருக்கும் போது நாய் கடிக்கு ஆளாகியிருப்பார். அவர் எழுந்திருக்கும் போது அவரது கையில் தொங்கியபடி காணப்பட்ட அவரது உடையின் நூல் அந்த நாயின் வாயில் சிக்கியது. நூழிலையில் அவரது கை தப்பித்தது. இது அங்கே சற்று பரபரப்பை உண்டாக்கியது. உடனே நாயின் உரிமையாளர் நாயை கட்டுக்குள் கொண்டு வந்தார். பின்பு ரவீனா டண்டனும் எந்த வித பதட்டமும் இல்லாமல் அந்த நாயை கொஞ்சினார். இந்த சம்பவம் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவீனா டண்டன், “மற்றொரு நாயைப் பார்த்ததால் அந்த நாய் குரைக்கத் தொடங்கியது, அப்போது தற்செயலாக எனது கையில் இருந்த ஆடையின் நூல் அந்த நாயின் பற்களில் சிக்கிக்கொண்டது. மற்றபடி எனக்கு எந்த காயமும் இல்லை” என்றார்.

Nakkheeran23 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நடிகையிடம் சட்டென பாய்ந்த நாய்; பட விழாவில் பரபரப்பு
PulseNews சுருக்கம்

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'ஓ மை டாக்' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை ரவீனா டண்டன், அங்கு அழைத்து வரப்பட்டிருந்த நாய்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்போது நாயுடன் அமர்ந்து போஸ் கொடுத்துவிட்டு எழுந்திருந்தபோது, நடிகையின் உடையிலிருந்த நூல் தற்செயலாக நாயின் வாயில் சிக்கியது. இதனால் நாய் கடித்தது போன்ற சூழல் உருவாகி அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் ரவீனா டண்டனுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், அந்த நாய் மற்றொரு நாயைப் பார்த்து குரைத்தபோது இது தற்செயலாக நடந்தது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema