PulseNews
சினிமா

OTT Release: காதல் ரொமான்ஸ் முதல் வங்கி கொள்ளை வரை: இந்த வாரம் ஓ.டி.டியில் என்னெ்ன படங்கள் ரிலீஸ் தெரியுமா?

டெக்னாலஜி வளர்ந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் தியேட்டரை விடவும், ஒடிடி தளங்களில் வரும் படங்களுக்கு ரசிகர்கள மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், இநத வாரமும், ஓடிடி ரசிகர்களுக்கு பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சோனி லைவ் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள முக்கியமான படைப்புகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். அன்பே டயானா – சோனி லைவ் பாரி இளவழகன் இயக்கி, நடித்த திரைப்படம் ‘அன்பே டயானா’. திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம் தற்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்ட இப்படம், வீக் எண்டில் வீட்டில் இருந்தபடியே படம் பார்க்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஐ நோபடி (I, Nobody_ – ஜியோ ஹாட்ஸ்டார் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் ஐ நோபடி. ஒரு வங்கி கொள்ளை, அதில் சிக்கிக்கொள்ளும் நாயகன் எப்படி மீண்டு வந்தார் என்பதை வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. தற்போது இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பார்ட் டைமர்ஸ் (Part Timers) – ஜியோ ஹாட்ஸ்டார் தெலுங்கில் உருவாகியுள்ள காமெடி வெப் தொடர் பார்ட் டைமர்ஸ். நகைச்சுவையை மையமாகக் கொண்ட இந்தத் தொடர், இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடர் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. மைக்கேல் (Michael) – ஜியோ ஹாட்ஸ்டார் உலகப் புகழ்பெற்ற பாப் இசை நட்சத்திரமான மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படம் ‘மைக்கேல்’. அவரது வாழ்க்கை, இசைப் பயணம் மற்றும் கலைத்துறையில் ஏற்படுத்திய தாக்கம் உள்ளிட்ட அம்சங்களை மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
OTT Release: காதல் ரொமான்ஸ் முதல் வங்கி கொள்ளை வரை: இந்த வாரம் ஓ.டி.டியில் என்னெ்ன படங்கள் ரிலீஸ் தெரியுமா?
PulseNews சுருக்கம்

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் திரையரங்குகளை விட ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சோனி லைவ் தளங்களில் பல்வேறு மொழிகளில் புதிய திரைப்படங்களும் வெப் தொடர்களும் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, பாரி இளவழகன் இயக்கி நடித்த ‘அன்பே டயானா’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. காதல், ரொமான்ஸ் முதல் வங்கி கொள்ளை வரையிலான கதையம்சம் கொண்ட பல்வேறு படைப்புகள் இந்த வாரம் ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ளன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema