PulseNews
சினிமா

அம்மாவை திணறடிக்கும் மகள், மனைவிக்கு ஆறுதலாக கணவன்; கார்த்தி - ரேவதி அடுத்த திட்டம் என்ன?

மயங்கி விழுந்த மகா.. அதிர்ச்சியில் உறைந்த திவ்யா, திரு - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட் திருமாங்கல்யம் நேற்றைய எபிசோடில், திரு மற்றும் திவ்யாவின் ஃப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டில் டெடி பியர் வேஷம் அணிந்து மகா கலந்து கொண்டிருந்த நிலையில், இன்று, போட்டோஷூட்டின் போது திவ்யா, டெடி பியரை பயன்படுத்தி திருவிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறாள். அதன்பின் திருவுக்கு முத்தமிட முயற்சிக்க, அவன் அங்கிருந்து தப்பித்து ஓடுகிறான். உடனே திவ்யா, "டெடி... அவனை பிடி" என்று சொல்ல, டெடி வேஷத்தில் இருக்கும் மகா திருவை கட்டிப்பிடிக்கிறாள். இதனைத் தொடர்ந்து திவ்யா ஓடி வந்து திருவுக்கு முத்தமிடுகிறாள். இந்த காட்சிகளை பார்த்த மகா உள்ளுக்குள் மிகவும் வேதனையடைகிறாள். போட்டோஷூட் முடிந்த பிறகு திரு மற்றும் திவ்யா சாப்பிடச் செல்ல, டெடி பியர் உடைக்குள் இருந்த மகா திடீரென மயங்கி விழுகிறாள். இதைப் பார்த்த போட்டோகிராபர் பதற்றத்தில் கத்த, சத்தம் கேட்டு திருவும் திவ்யாவும் அங்கு ஓடி வருகின்றனர். அவர்கள் டெடி பியரின் முகமூடியை அகற்றியபோது, அதன் உள்ளே மகா இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர் திவ்யா, "எதற்காக இப்படி செய்தாய்?" என்று மகாவிடம் கேட்க, "போட்டோஷூட் எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வேஷம் போட்டேன்" என்று மகா கூறுகிறாள். இதனால் மனமுடைந்த திவ்யா, மகாவை கட்டிப்பிடித்து உணர்ச்சிவசப்படுகிறாள். இதனைத் தொடர்ந்து, அம்பிகா கூறிய ஆசாரியைத் தேடி மகா செல்ல, கௌதம் அவளைப் பின்தொடர்கிறான். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சாமுண்டீஸ்வரியிடம் ஆவேசம் காட்டிய ரேவதி.. மனைவிக்கு ஆறுதலாக துணை நின்ற கார்த்திக்! - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் பல பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறின. இதனைத் தொடர்ந்து இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் உணர்ச்சியும் பரபரப்பும் கலந்த காட்சிகள் ரசிகர்களை காத்திருக்கின்றன. அதாவது, ரேவதி நேரடியாக சாமுண்டீஸ்வரியை சந்தித்து, கார்த்திகை பற்றி தவறாக புரிந்துகொண்டு ஏன் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்தீர்கள் என கடும் கோபத்துடன் கேள்வி எழுப்புகிறாள். சாமுண்டீஸ்வரியின் செயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சுட்டிக்காட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ரேவதி, அதிரடியான வார்த்தைகளால் அவரை திணற வைக்கிறாள். இதையடுத்து, தலையில் காயம் அடைந்திருக்கும் ரேவதியை கார்த்திக் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறச் செய்கிறான். மனைவியின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளும் கார்த்திக்கின் அக்கறை இந்த எபிசோடில் மனதை நெகிழ வைக்கிறது. சிகிச்சை முடிந்த பிறகு இருவரும் பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு திரும்புகின்றனர். மறுபக்கம், கார்த்திக் வெளியே வந்திருப்பது குறித்து சிவனாண்டியும் சந்திரகலாவும் தீவிரமாக ஆலோசனை நடத்துகின்றனர். கார்த்திக்கிற்கு எதிராக அடுத்ததாக என்ன செய்யலாம், அவரை மீண்டும் எப்படி சிக்கலில் மாட்ட வைக்கலாம் என்று திட்டமிடும் இருவரின் பேச்சு கதைக்களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில், நடந்த சம்பவங்களால் மனவேதனையில் இருக்கும் ரேவதி வீட்டில் சாப்பிடாமல் தனியாக படுத்துக் கொள்கிறாள். இதை கவனிக்கும் கார்த்திக், அவளுக்காக உணவு எடுத்துச் சென்று அன்பாக பேசி சமாதானப்படுத்துகிறான். கணவரின் அக்கறை மற்றும் ஆறுதல் வார்த்தைகளால் மனம் உருகும் ரேவதி, இறுதியில் சாப்பிட சம்மதிக்கிறாள். இந்த உணர்ச்சிகரமான காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேவதியின் கோபம் சாமுண்டீஸ்வரியின் மனதை மாற்றுமா? சிவனாண்டி மற்றும் சந்திரகலாவின் அடுத்த திட்டம் என்ன? கார்த்திக் மற்றும் ரேவதியின் வாழ்க்கையில் அடுத்ததாக என்ன திருப்பம் காத்திருக்கிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள. அனாதை என அவமானப்படுத்திய கிருபா.. உடைந்து நிற்கும் கர்ணா - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட் சின்னஞ்சிறு கிளியே சீரியலின் நேற்றைய எபிசோடில், இந்து கையில் அடிபட்டது போல நடிக்க, கர்ணா அவளை அக்கறையுடன் கவனித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று கர்ணா இந்துவுக்கு உதவுவதைக் கவனித்த ஜெயந்தி, சுகுணாவிடம், "இந்து கொடுத்து வைத்தவள். நமக்கு இப்படியெல்லாம் நடக்காது" என்று ஆதங்கப்படுகிறாள். இதைத்தொடர்ந்து கர்ணா, பாண்டியிடம் தனது மனதில் இந்துவைப் பற்றிய காதல் இருப்பதாகவும், அதை அவளிடம் சொல்ல ஆசையாக இருந்தாலும் தைரியம் வரவில்லை என்றும் கூறுகிறான். அதற்கு பாஸ்கர், *"பேசாம குடிச்சிட்டு போய் உன் மனசுல இருக்கிறதை சொல்லிடு*" என்று ஐடியா கொடுக்கிறான். மறுபக்கம் கிருபா வீட்டில் கணபதி பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால், இந்துவை வீட்டிற்கு வெளியே காத்திருக்கச் சொல்கின்றனர். அப்போது அங்கு வரும் கர்ணா, இந்துவிடம் ஏன் வெளியே நிற்கிறாய் என்று கேட்கிறான். அதற்கு இந்து, "வீட்டில் பூஜை நடக்கிறது. வெளியாட்கள் உள்ளே இருக்கக் கூடாதாம். நீயும் இங்கதான் இருக்கணும்" என்று கூறுகிறாள். அதற்கு கர்ணா, "நான் ஏன் வெளியே இருக்கணும்? கிருபா அண்ணாவோட தம்பிதானே" என்று பதிலளிக்கிறான். அந்த நேரத்தில் வெளியே வரும் கிருபா, கர்ணாவை உள்ளே அழைத்துச் செல்கிறான். கர்ணாவுக்கு தலைவாழை இலையில் சிறப்பாக உணவு பரிமாறப்படுவதைக் கண்டு இந்து ஆச்சரியப்படுகிறாள். அப்போது வெளியே வரும் பூசாரி, "கணபதி பூஜை முடிந்த பிறகு ஒரு அனாதைக்கு உணவு வழங்க வேண்டும். அதனால்தான் உங்கள் கணவரை உள்ளே அழைத்துச் சென்றார்கள்" என்று கூறுகிறார். இந்த வார்த்தைகளைக் கேட்டு இந்து அதிர்ச்சியடைகிறாள். அதே சமயம், சாப்பிட்டு முடித்துவிட்டு இலையை வெளியே போட வந்த கர்ணாவும் இதைக் கேட்டு மனமுடைந்து நிற்கிறான். கிருபாவின் இந்த செயலால் கர்ணா மிகுந்த வேதனை அடையும் நிலையில், அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அம்மாவை திணறடிக்கும் மகள், மனைவிக்கு ஆறுதலாக கணவன்; கார்த்தி - ரேவதி அடுத்த திட்டம் என்ன?
PulseNews சுருக்கம்

திருமாங்கல்யம் தொடரின் இன்றைய எபிசோடில், திவ்யா மற்றும் திருவின் திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் பிடிப்பின் போது, டெடி பியர் வேடம் அணிந்த மகா பங்கேற்கிறார். அந்த நிகழ்வின்போது, டெடி பியரை வைத்து திருவிடம் தனது காதலை திவ்யா வெளிப்படுத்துகிறார்.

இதனைத் தொடர்ந்து திருவுக்கு முத்தமிட திவ்யா முயலும்போது, அங்கிருந்து திரு தப்பித்து ஓடுகிறார். அப்போது திவ்யா டெடி வேடத்தில் இருக்கும் மகாவை, திருவை பிடிக்குமாறு உத்தரவிடுகிறார். இந்தச் சம்பவத்தால் மகா திணறுவதும், திவ்யா அதிர்ச்சியில் உறைவதும் இன்றைய எபிசோடின் முக்கிய அம்சமாக உள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema