PulseNews
சினிமா

வைரலாகி வரும் ஆபாச வீடியோ உண்மையா? - ஷாலினி பாண்டே பதில்

சமீப காலமாக ஏஐ தொழில்நுட்பம் மூலம் திரை பிரபலங்களின் போலி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் இதில் அதிகம் இடம் பிடிக்கின்றன. இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட நடிகைகள் குரல் கொடுத்துள்ளனர். இதுவரை ராஷ்மிகா மந்தனா, கஜோல், பிரியங்கா மோகன், ருக்மிணி வசந்த் உள்ளிட்ட நடிகைகள் இந்த ஏஐ தொழில்நுட்பத்தால் ஆபாசமாக உருவாக்கப்படும் டீப் ஃபேக் வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் மிருணாள் தாக்கூரும் பாதிக்கப்பட்டார். பின்பு அதற்கு எதிராக குரல் கொடுத்திருந்தார். இதன் வரிசையில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளவர் நடிகை ஷாலினி பாண்டே. இவர் அர்ஜூன் ரெட்டி மூலம் பிரபலமாகியிருந்தார். தமிழில் ஜிவி பிரகாஷூடன் ‘100% காதல்’, ஜீவா நடித்த ‘கொரில்லா’ மற்றும் தனுஷ் நடித்த ‘இட்லி கடை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தன்னுடைய டீப் ஃபேக் வீடியோவிற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “தற்போது இணையத்தில் பரவி வரும், ஏஐ-யால் உருவாக்கப்பட்ட எனது போலி வீடியோவை பற்றி நான் பேச விரும்புகிறேன். அந்த வீடியோ முற்றிலும் புனையப்பட்டது, அதில் இருப்பது நான் கிடையாது. தொழில்நுட்பம் தனிநபர்களையும் குறிப்பாகப் பெண்களை, குறிவைத்துத் துன்புறுத்துவதற்காக தவறாகப் பயன்படுத்தப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த வகையான துஷ்பிரயோகத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், மேலும் தொழில்நுட்பத்தின் இத்தகைய தவறான பயன்பாடு ஒருபோதும் இயல்பாக்கப்படக்கூடாது என்று நம்புகிறேன். இந்தக் வீடியோவை நீங்கள் கண்டால், தயவுசெய்து அதைப் பகிரவோ, பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம். அதற்குப் பதிலாக, உடனடியாக ரிப்போர்ட் செய்யுங்கள். அனைவரும் பொறுப்புடனும் கவனத்துடனும் நடந்துகொண்டு, அது மேலும் பரவுவதற்கு வழிவகுப்பதை விட, அதன் பரவலைத் தடுக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வைரலாகி வரும் ஆபாச வீடியோ உண்மையா? - ஷாலினி பாண்டே பதில்
PulseNews சுருக்கம்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரைப்பிரபலங்களின் போலி புகைப்படங்கள் மற்றும் ஆபாசமான டீப் ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. ராஷ்மிகா மந்தனா, கஜோல், பிரியங்கா மோகன், ருக்மிணி வசந்த் மற்றும் மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பல நடிகைகள் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த வரிசையில் நடிகை ஷாலினி பாண்டே குறித்த ஆபாச வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது தொடர்பாகத் தன் மீதான குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema