PulseNews
சினிமா

“சாட் ஜிபிடியில் நாங்க தான் நம்பர் 1...” - மாறி மாறி புகழ்ந்த பிரேமலதா, எல்.கே.சுதீஷ்!

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா நேற்று (25-08-26) ரசிகர்களாலும், கட்சித் தொண்டர்களாலும் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் புகழ் அஞ்சலியையும் செலுத்தினர். விஜயகாந்தின் பிறந்தநாள் தினத்தை ஆகஸ்ட் 25-யை வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிக கடைப்பிடித்து வருகிறது. இதனை முன்னிட்டு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அந்த வகையில் கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பிரேமலதா விஜயகாந்த் மற்றும், தேமுதிக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது எல்.கே.சுதீஷ் கூறியதாவது, “சாட் ஜிபிடியில் (Chat GPT) ஒரு தரவு வந்திருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக வெற்றி பெற்ற எந்த சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது? என்று சாட் ஜிபிடியில் பார்த்தால் பிரேமலதா விஜயகாந்த் பெயர் முதல் இடத்தில் இருக்கிறது. சாட் ஜிபிடியில் சட்டப்பேரவையின் சிறந்த எம்.எல்.ஏ என்று போட்டால் பிரேமலதா பெயர் வருகிறது” என்று கூறினார். இதையடுத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “எல்.கே.சுதீஷ் முதல் முறையாக எம்.பியாக போயிருக்கிறார். நாடாளுமன்றத்தில் எந்த எம்.பி சிறப்பாக செயல்படுகிறார் என்று சாட் ஜிபிடியில் போட்டால் அதில் எல்.கே.சுதீஷ் பெயர் தான் முதலில் வருகிறது. ஏனென்றால் அவர் தமிழ்நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சிறப்பாக செயல்படுகிறார். இதை நாங்கள் சொல்லவில்லை, சாட் ஜிபிடி தான் சொல்கிறது” என்று பேசினார். சாட் ஜிபிடியில் இருவர் பெயர் வருவதாக இருவரும் மாறி மாறி புகழ்ந்து பேசியது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“சாட் ஜிபிடியில் நாங்க தான் நம்பர் 1...” - மாறி மாறி புகழ்ந்த பிரேமலதா, எல்.கே.சுதீஷ்!
PulseNews சுருக்கம்

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று (ஆகஸ்ட் 25) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியதுடன், பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விஜயகாந்தின் பிறந்தநாளைத் தேமுதிக வறுமை ஒழிப்பு தினமாகக் கடைப்பிடித்து வருகிறது. இதையொட்டி கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீஷ் ஆகியோர் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசிய நிகழ்வு சாட் ஜிபிடியில் முதலிடத்தைப் பிடித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema