PulseNews
சினிமா

எழுந்த சர்ச்சை; க்ரித்தி சனோன் விளம்பரம் நீக்கம்!

ரக்‌ஷா பந்தன்(ஆக.28) தினத்தை ஒட்டி பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் ஒரு நகைக்கட விளம்பரத்தில் நடித்திருந்தார். அதில் அவர் பிகினி உடை அணிந்திருந்தார். அந்த உடையுடன் தனது சகோதரராக நடித்த ஒருவருக்கு ராக்கி கட்டும் கட்டுகிறார். மேலும் செல்லப்பிராணி நாய்க்கும் ராக்கி கட்டிவிடுகிறார். இது சர்ச்சையைக் கிளப்பியது. அதாவது க்ரித்தி சனோனின் உடை இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்ற விமர்சனத்திற்கு ஆளானது. விளம்பரத்தில் இடம் பெற்ற காட்சி இந்த விவகாரத்தில் நடிகையும் பாஜக எம்.பி-யுமான கங்கனா ரனாவத் க்ரித்தி சனோனின் உடையை விமர்சித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “காக்டெய்ல் உடைகள் முதல் லெஹங்கா சோலி வரை பல உடைகள் இருந்தும் ,பிகினி அல்லது உள்ளாடைகளை மட்டும் அணிந்துகொண்டு ஏன் உங்கள் சகோதரனுக்கு ராக்கி கட்ட வேண்டும்? உங்கள் மற்ற ஸ்டைலான ஆடைத் தேர்வுகள் எல்லாம் எங்கே போனது” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த க்ரித்தி சனோன், “கொண்டாட்டத்தின் சாராம்சம் நாம் அணியும் ஆடைகளில் இல்லை, மாறாக, அந்த மரபுகளின் மீது நாம் கொண்டிருக்கும் உணர்வுகளில் இருக்கிறது. ரக்ஷா பந்தன் என்பது பாதுகாப்பின் ஒரு பிணைப்பு” என தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். இவரது பதிவிற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த நகைக்கடை நிறுவனம் சம்பந்தப்பட்ட விளம்பரத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய கலாச்சாரம், மரபுகள் மற்றும் பண்டிகைகள் மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. ஒரு நிறுவனமாக, இத்தகைய மகிழ்ச்சியான தருணங்களை ஒட்டுமொத்த குடும்பத்தினருடனும் கொண்டாடுவதையே நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். அந்த வகையில், இந்த முறை அந்த அன்பையும் கொண்டாட்டத்தையும் எங்கள் செல்லப்பிராணிகளிடமும் விரிவுபடுத்த விரும்பினோம். அதனால் எங்களின் சமீபத்திய விளம்பரத்தில் குறிப்பிட்ட ஒரு தரப்பின் உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால், அதை மதிக்கும் விதமாக, அனைத்து ஊடகங்களிலிருந்தும் அந்த விளம்பரத்தை நாங்கள் திரும்பப் பெறுகிறோம். உங்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை” என்றுள்ளனர்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
எழுந்த சர்ச்சை; க்ரித்தி சனோன் விளம்பரம் நீக்கம்!
PulseNews சுருக்கம்

ரக்‌ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு நடிகை க்ரித்தி சனோன் நடித்த நகைக்கடை விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விளம்பரத்தில் பிகினி உடையில் இருந்த நடிகை, தனது சகோதரருக்கும் செல்லப்பிராணிக்கும் ராக்கி கட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இந்த உடை இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று எழுந்த கடும் விமர்சனங்களை அடுத்து அந்த விளம்பரம் நீக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகையும் பாஜக எம்.பி-யுமான கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema