PulseNews
சினிமா

எம்.பி.யாகும் திரிஷா!

அ டுத்த இருபது வரு டங்களுக்கு தமி ழக அரசியலில் ஒவ்வொரு அசைவிலும் நிற்கக்கூடிய ஒரு ஆள் நடிகை திரிஷா என்கிறார் கள் அவருக்கு நெருக்கமானவர்கள். நுனி நாக்கில் புரண்டு ஓடும் ஆங்கிலம், சரளமாக வரும் இந்தி, தமிழ், மலை யாளம், தெலுங்கு, கன்னடம் என நடிகையாக இருந்ததால் ஒரு பன்மொழி வித்தகியாகவும் இருக்கிறார். அவரது தாயார் உமா கிருஷ்ணன், எல்லாவற்றிலும் திரிஷாவைவிட திறமையான அணுகுமுறை கொண்டவராக இருக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் ஒரு கடுமையான சோதனையை விஜய்க்கு உருவாக்கியது. அப்படி ஒரு கடுமையான, நெருக்கடியான நேரத்தை விஜய் அதுவரை வாழ்க்கையில் சந்தித்தது இல்லை. 24 மணி நேரம் பத்தாது என்கிற அளவிற்கு பரபரப்பு விஜய்யை தொற்றிக்கொண்டது. விஜய்க்கு இந்த அனுபவம் புதிது. நடிப்பு, கேரவன்களில் ஓய்வு, அதுவும் வருடத்திற்கு ஒரு படம், புதுப்புது கார்களை ஓட்டுவதில் பிரியம் என மிக ஜாலியாக இருந்த விஜய் அரசியல் நெருப்பில் வாடிப் போனார். அந்த சூட்டை, அது ஏற் படுத்திய பரபரப்பை சமாளிக்க முடியாமல் திணறினார். இயல்பி லேயே அதிகம் பேசாத விஜய், நொடிக்கு நொடி மிக அதிகமாகப் பேசவேண்டியிருந்தது. ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி போன்ற நெருக்கமானவர்கள் கூட உதவி செய்யமுடியாத ஒரு சூழ்நிலை விஜய்க்கு ஏற்பட்டது. விஜய்யின் வீட்டில் ஜெகதீஷ் பழனிசாமி தலைமையில் ஒரு மினி தலைமைச் செயலகமே நடந்தது. ஜெகதீஷ், விஜய்யை தொடர்புகொண்டு ஒவ்வொரு அசைவையும் தீர்மானித்துக் கொண்டிருக்கையில் பல நேரங்கள் விஜய்யுடனான தகவல் தொடர்புக்கு உதவியாக இருந்தது திரிஷாவும், அவரது தாயார் உமா கிருஷ்ணனும் தான். இந்த தகவல் தொடர்புகள் பல நாட்கள் நீடித்தன. இந்த சூழல் விஜய்க்கு ஏற்படுத்திய தனிப்பட்ட மன அழுத்தத்தை தீர்ப்பதற்கு விஜய்யின் மனைவி, மகன், மகள் ஆகியோர் அவர் கூட இருக்கவில்லை. பல்லாயிரம் சதுர அடிகள் கொண்ட பனையூர் வீட்டில் தங்காமல் முழுக்க முழுக்க திரிஷாவின் வீடு அமைந்துள்ள பட்டினப்பாக்கத்தில்தான் விஜய் தங்கினார். கடந்த பத்து வருடங்களாக விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஜெகதீஷ் பழனிச்சாமி, திரிஷா ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்கது” என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள். “விஜய்யின் பிறந்தநாள் அன்று நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு ‘கேக்குடன் சென்ற திரிஷா, விஜய்யை வாழ்த்திய போட்டோ எடுக் கப்பட்டது பட்டினப்பாக்கம் வீட்டில். போட்டோ எடுத்தது ஜெகதீஷ் பழனிச்சாமி. விஜய்யைப் பொறுத்தவரை அவரது குடும்பத்தை, மனைவி, மகன், மகளை பெரிதாக மதித்ததில்லை. மகளுடன் மட்டும் எப்போதாவது பேசும் விஜய், மனைவி சங்கீதாவைப் பற்றி கவலைப்பட்டதில்லை. மகன் ஜேசன் சஞ்சய்யின் ‘"சிக்மா'’ படத்தை தயாரிக்கும் ‘லைக்கா’ நிறுவனத்தின் உரிமையாளர், இலங்கைத் தமிழரான சங்கீதாவின் தந்தை பூர்ணலிங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவர் சங்கீதா விடம் பேசினார். ஜேசன்சஞ்சய் அம்மா சங்கீதா விடம் பேசி, விஜய்க்கு எதிராக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா தொடுத்திருந்த விவாகரத்து வழக்கை வாபஸ் பெற வைத்தார். மகனின் பேச்சைக் கேட்டு வழக்கை வாபஸ் பெற்ற சங்கீதாவுக்கு, திரிஷா (இந்த வயதிலும் நாடகமா? பணம் சம்பாதித்து விட்டு அமைதியைத் தேடும் வழியைப் பாருங்கள்) என டிவிட்டரில் மற்ற யாருக்கும் புரியாத மாதிரி மிகக் கடுமையான ஒரு பதிவைப் போட்டார். வழக்கை வாபஸ் பெற்ற கையோடு சங்கீதா குடும்பம் மறுபடியும் விஜய்யோடு சேர்ந்துவிடும் என்கிற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் நிலவியது. இது திரிஷாவுக்குப் பிடிக்கவில்லை. விஜய் எப்பொழுதும் திரிஷாவின் கையில்தான் இருக்க வேண்டும் என நினைத்த திரிஷா, சங்கீதாவுக்கு பதில் கொடுக்கும் வகையில் ‘பணத்தை வாங்கிக்கொண்டு போ’ என்கிற அர்த்தம் வரும் பாணியில் ட்வீட் போட்டார் ’என்கிறார்கள் திரிஷாவுக்கு நெருக்கமானவர்கள். “திரிஷாவுக்கு ஏற்பட்ட கோபம் விஜய்க்கு நெருக்கமானவர்களின் ஆலோசனையால் ‘ட்வீட்’ வடிவில் தீர்த்து வைக்கப்பட்டது. அதனால்தான் அந்த ட்வீட் சங்கீதாவுக்கு பதில் சொல்லும் வகையில் எழுதப்பட்டது. இந்த ட்வீட்டை விஜய்யின் அப்பா சந்திரசேகர் ரசிக்கவில்லை. சுதந்திர தின விழாவில், "என் குடும்பம் என்றால் அது திரிஷாதான்'’என வெளிப்படையாக அறிவிப்பதுபோல குடும்பத்தினரோடு திரிஷா காட்சியளித்தது தமிழ்நாடு எங்கும் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. ஒன்றுமே நடக்காதது போல விஜய், திரிஷாவை சுதந்திர தின அணிவகுப் பில் இடம்பெறச் செய்தார். அம்மா உமா கிருஷ்ணனோடு சுதந்திர தின விழாவுக்கு வந்த திரிஷா அருகில் அமர்ந்திருந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வணக்கம் சொன்னார். ஆனால், அவர் அதை மதிக்கவே இல்லை. தனது கோபத்தை மேடையிலேயே வெளிப்படையாகக் காண்பித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். திரிஷா வெளிப்படையாக சுதந்திரதின அணிவகுப்பில் பங்கேற்றதைத் தொடர்ந்து கோபத்தின் உச்சிக்கே சென்ற சங்கீதா, மறுபடியும் விவாகரத்து வழக்கு தொடர்ந்தால் என்ன? என்று தனது வழக்கறிஞர் களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் என்கிறது சங்கீதாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள். "மிகவிரைவில் அ.தி.மு.க.வின் ஜெயலலிதா பாணியில் த.வெ.க. சார்பில் திரிஷா ராஜ்யசபா எம்.பி. ஆகிவிடுவார். விஜய்யின் அரசியல் வாரிசு திரிஷாதான். கங்கனா ரனாவத் போன்ற நடிகைகள் பாராளுமன்றத்தில் சோபிக்கவில்லை. திரிஷா ராஜ்யசபா எம்.பி.யானால் கலக்கு கலக்கு என்று டெல்லியையே கலக்கிவிடுவார். அதற்கான வேலைகள் எல்லாம் வேகமாக நடைபெற்று வருகின்றன. விஜய்யின் அரசியல் வாழ்க்கையைப் பொறுத்தவரை அவரது குடும்பம் மிகப்பெரிய ‘மைனஸ் பாயிண்ட்’டாகவே இருக்கும். ஆனால், திரிஷாவை விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது' என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
எம்.பி.யாகும் திரிஷா!
PulseNews சுருக்கம்

நடிகை திரிஷா விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வரக்கூடும் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல மொழிகளில் சரளமாகப் பேசும் திறன் கொண்ட அவர், தமிழக அரசியலில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு முக்கிய பங்காற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன், அவரை விடவும் நுணுக்கமான அணுகுமுறைகளைக் கொண்டவர் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் விஜய் போன்றவர்களுக்குச் சவாலாக அமைந்த நிலையில், திரிஷாவின் அரசியல் பிரவேசம் குறித்த இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema