‘அரசன்’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டாரா? பரவிய தகவல்! படக்குழு சொன்ன பதில் இதுதான்!
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் விஜய் சேதுபதி. குறிப்பாக ‘பேட்ட’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘ஜவான்’ உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் கவனம் ஈர்த்தார். ஒருகட்டத்தில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, மீண்டும் கதாநாயகனாக கவனம் செலுத்தத் தொடங்கினார். அந்த வகையில் அவர் நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ரொமான்டிக் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்திலும் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘அரசன்’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக இணையத்தில் தகவல் பரவியது. படத்திற்காக அவர் ஒதுக்கிய தேதிகள் வீணாகிவிட்டதாகவும், இந்தப் படத்திலேயே அதிக கவனம் செலுத்துவதால் தனது மற்ற படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்படுவதாக கருதியே அவர் விலகியதாகவும் கூறப்பட்டது. மேலும், ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில மாதங்களிலேயே விஜய் சேதுபதி விலகிவிட்டதாக ஏற்கனவே தகவல்கள் பரவியிருந்தன. ஆனால் அப்போது அந்த செய்தியை விஜய் சேதுபதி திட்டவட்டமாக மறுத்திருந்தார். தற்போது மீண்டும் அதேபோன்ற தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், படக்குழுவினரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது வரை விஜய் சேதுபதி ‘அரசன்’ படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்றே தெரிகிறது. படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக வேறு எந்த தகவலும் வெளியாகாத நிலையில், விலகல் குறித்த செய்தி வெறும் வதந்தியாகவே பார்க்கப்படுகிறது.

‘அரசன்’ திரைப்படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. வில்லன் மற்றும் கதாநாயகன் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, சமீபத்தில் ‘மகாராஜா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கதாநாயகனாகவே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த சூழலில், அவர் ‘அரசன்’ படத்தில் இருந்து விலகியதாக வெளியான தகவல்களுக்குப் படக்குழுவினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும், அப்படக்குழுவினர் என்ன பதிலைக் கூறியுள்ளனர் என்பது குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.