PulseNews
சினிமா

முதல் நாள் ரெமோ, அடுத்து அந்நியன், 3-வது அம்பி; காதல் முறிவு, காதலன் கேரக்டரை உடைத்த அனுபமா

எழுதியவர்: யஷஸ்வினி ஸ்ரீ தமிழில் கொடி, பைசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது கடந்தகால உறவில் 2 ஆண்டுகளாக தான் அனுபவித்த உளவியல் துன்புறுத்தல் குறித்து மனம் திறந்துள்ளார். நடிகர் துருவ் விக்ரமுடன் அவர் காதல் உறவில் இருந்ததாகவும், இருவரும் பிரிந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் யூகங்கள் எழுந்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த அனுபமாவின் பேட்டி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: தன்யா வர்மாவுக்கு அளித்த பேட்டியில், அந்த உறவு தனது உடல் மற்றும் மனநிலையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து நடிகை விரிவாகப் பேசியுள்ளார். இருப்பினும், தனது முன்னாள் காதலரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. அந்த ஒரு பதிவுக்குப் பின்னால் இரண்டு ஆண்டுகளின் வலியும், உடல் மற்றும் உணர்வுரீதியான அழிவும் இருக்கிறது” என்று அனுபமா பரமேஸ்வரன், தன்யா வர்மாவிடம் கூறினார். முன்னதாக, உங்கள் அமைதியை இறுதியாகக் கண்டுபிடிக்க, முடிவே இல்லாத பாதையை நீங்கள் விட்டுவிட வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவை சாதாரணமாக பதிவிடவில்லை என்றும், உண்மையாகவே அதிலிருந்து குணமடைந்துவிட்டதாக உணர்ந்த பிறகே அதை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், எதையாவது ஒரு புகைப்படத்தை சும்மா பதிவிட விரும்பவில்லை. நான் தயாராக இருந்தபோது, உண்மையாகவே குணமடைந்த பிறகு ஏதாவது ஒன்றைப் பதிவிட வேண்டும் என்று நினைத்தேன். தன்னைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் மிகப்பெரிய விஷயத்தை உணர்ந்துகொண்ட ஒரு பெண்ணின் பயணம் அது. மிகவும் முக்கியமான ஒன்றை வெளிப்படுத்துவதற்கு முன்பு, குணமடைய அவள் தனது நேரத்தை எடுத்துக்கொண்டாள்” என்று அனுபமா கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தான் அனுபவித்த உறவின் போக்கை விளக்குவதற்காக பிரபலமான தமிழ் திரைப்படக் கேரக்டர்களை அனுபமா உதாரணமாகக் கூறினார். ஷங்கர் இயக்கிய ‘அந்நியன்’ படத்தின் கதாநாயகனைப் போல, தனது முன்னாள் துணைவரும் வெவ்வேறு குணநலன்களைக் கொண்டவராக மாறியதாக அவர் ஒப்பிட்டுப் பேசினார். உளவியல் துன்புறுத்தல் பற்றி பலருக்குத் தெரியாது. ஒரு நாள் அவர் ரெமோவாக இருப்பார். அப்போது நமக்கு அன்பும் அக்கறையும் கொட்டிக் கிடக்கும். உலகிலேயே அதிர்ஷ்டசாலியான நபர் நாம்தான் என்று கூட நினைக்கத் தோன்றும். ஆனால், அடுத்த நாளே அவர் அந்நியனாக மாறிவிடுவார். அது அவரது மிகவும் கொடூரமான பக்கமாக இருக்கும். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பது பற்றி அவருக்கு கொஞ்சமும் அக்கறை இருக்காது. மறுநாள் அதே நபர் அம்பியாக மாறுவார். தான் செய்த தவறுகளுக்காக என்னிடம் மன்னிப்பு கேட்டு, குழந்தையைப் போல அழுவார். இனிமேல் அந்தத் தவறுகளை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உறுதியளிப்பார். ஆனால், மீண்டும் அந்த அன்பின் சுழற்சி தொடரும். அந்த இரண்டு ஆண்டுகளில் தான் வளர்ச்சியடைவதற்குப் பதிலாக, என்னையே சுருக்கிக்கொண்டேன். அளவு உடல் எடையை குறைந்தது. பயத்திலேயே வாழ்ந்தேன். எந்த நாளில் எந்த மனநிலையில் இருக்கும் நபரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது தெரியாமல் இருந்தேன். தனது துன்புறுத்தல்கள் குறித்து பேசியபோது மக்கள் கூறிய கருத்துக்கள் குறித்து பேசிய அனுபமா, முதல் பிரிவில் இதைப் பற்றி தெரிந்தவர்கள், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஒருவர் பாதிக்கப்படுவதை நேரில் பார்த்த குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் உள்ளனர். இரண்டாவது பிரிவில் இதைப் பற்றி எந்தவிதமான புரிதலும் இல்லாதவர்கள் உள்ளனர். அந்த வார்த்தையை அவர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அதைப் பற்றி ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. மூன்றாவது பிரிவினர், இதை பாலின அடிப்படையிலான விஷயமாகக் கருதி, தங்களது அனுமானங்களின் அடிப்படையில் எதிர்மறையான கருத்துகளைப் பதிவிடுவார்கள்” ஆனால், நான்காவது பிரிவினர்தான் தனக்கு மிகவும் முக்கியமானவர்கள். அடுத்த பிரிவில், நான் பேச விரும்பும் நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதே அனுபவத்தில் இருந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அது என்னவென்று இன்னும் அடையாளம் காணவில்லை. அதுதான் மிகவும் ஆபத்தான பிரிவு. அதாவது, தாங்கள் அனுபவித்து வரும் துன்புறுத்தல் ஒரு குறிப்பிட்ட வகையான துன்புறுத்தல் என்பதை உணராமல், அதே சுழற்சியில் சிக்கியிருக்கும் நபர்களைப் பற்றியே அவர் குறிப்பிட்டார். அனுபமா பரமேஸ்வரனும் நடிகர் துருவ் விக்ரமும் காதல் உறவில் இருப்பதாக வெளியான தகவல்கள் 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதன்முதலில் வெளியாகின. அந்த சமயத்தில் இருவரும் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்து வந்தனர். இந்த திரைப்படம் 2025 அக்டோபரில் வெளியானது. இதற்கிடையே, துருவ் அனுபமா காதல் குறித்த செய்திகள் மேலும் அதிகரித்தன. இருப்பினும், இருவருமே இந்தக் காதல் வதந்திகள் குறித்து வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
முதல் நாள் ரெமோ, அடுத்து அந்நியன், 3-வது அம்பி; காதல் முறிவு, காதலன் கேரக்டரை உடைத்த அனுபமா
PulseNews சுருக்கம்

கொடி, பைசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது கடந்தகால காதல் உறவில் 2 ஆண்டுகளாக தான் எதிர்கொண்ட உளவியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். நடிகர் துருவ் விக்ரமுடன் அனுபமா காதலில் இருந்ததாகவும், தற்போது அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் பரவலான யூகங்கள் எழுந்த நிலையில், இந்த பேட்டி வெளியாகியுள்ளது.

தன்யா வர்மாவுக்கு அளித்த நேர்காணலில், அந்த உறவு தனது மனநிலையை எவ்வாறு பாதித்தது என்பது குறித்து அனுபமா மனம் திறந்துள்ளார். முதல் நாளில் ரெமோவாகவும், பிறகு அந்நியனாகவும், மூன்றாவதாக அம்பியாகவும் காதலன் மாறித் தன்னைத் துன்புறுத்தியதாக அவர் அந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema