பகத் பாசிலின் “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
பகத் பாசில் புதிய படம் ரிலீஸ் தேதி மாற்றம்: மாயாஜாலம் கலந்த பேன்டசி படம் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ செப்டம்பர் 11-ல் இருந்து அக்டோபர் 2-க்கு மாற்றம், ராஜமவுலி மகன் கார்த்திகேயா தயாரிப்பில் பகத் பாசில், குழந்தை நட்சத்திரம் சாரா, சவுரப் சக்தேவா நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியாகிறது. Bhagat Basil movie release date change: Fantasy magic film ‘Don’t Trouble The Trouble’ shifts from September 11 to October 2, produced by Rajamouli’s son Karthikeya, starring Bhagat Basil, child star Sara and Saurabh Shukla, releasing in Tamil, Telugu and Malayalam.

பகத் பாசில் நடிக்கும் மாயாஜாலம் கலந்த பேன்டசி திரைப்படமான ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் 11-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், தற்போது அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரிக்கும் இப்படத்தில் பகத் பாசிலுடன், குழந்தை நட்சத்திரம் சாரா மற்றும் சவுரப் சக்தேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.