PulseNews
சினிமா

திடீர் புகழ், திரையுலக வெளிச்சம்; ஆணவத்தின் உச்சமாக இருந்தேன்: தன்னை மாற்றிய சம்பவம் குறித்து நமிதா உடைத்த ரகசியம்

2000-களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த நமீதா, தனக்கு இருந்த ஆணவம், தான் நடித்திருக்கக் கூடாத படங்கள் மற்றும் காலம் தாழ்வதற்கு முன்பே தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய திரையுலக நண்பர்கள் குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இது குறித்து டூரிங் டாக்கீஸ் நிகழ்ச்சியில் பேசியுள்ள அவர், எனது ஆரம்ப காலத்தில் நான் கொஞ்சம் ஆணவமாக இருந்தேன். முதல் இரண்டு ஆண்டுகள் நான் அப்படித்தான் இருந்தபோது, பலரும் என்னிடம், ‘இப்படிப்பட்ட மனநிலையுடன் இருந்தால் இந்தத் திரையுலகில் நீண்ட காலம் உங்களால் நிலைத்திருக்க முடியாது’ என்று அறிவுறுத்தினர். அதன் பிறகு நான் என்னை மாற்றிக்கொண்டேன் என்று கூறியுள்ளார். அந்தக் காலகட்டத்தில் தனது நடத்தை படப்பிடிப்பு தளத்தில் இருந்த சக நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தன்னுடன் பணியாற்றிய இளம் உதவியாளர்கள் வரை பலருக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதையும் நமீதா ஒப்புக்கொண்டுள்ளார். தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரை ஒருவரிடமிருந்து மட்டும் வரவில்லை என்றும், தனது அணுகுமுறை எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த பல திரையுலக சகாக்கள், அது தனது திரையுலக வாழ்க்கையை பாதிப்பதற்கு முன்பே தன்னை எச்சரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். நமீதா யார்? 1981ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் நமீதா முகேஷ் வங்கவாலா என்ற பெயரில் பிறந்தவர் நமீதா. தனது 17 வயதில், 1998ஆம் ஆண்டு ‘மிஸ் சூரத்’ பட்டத்தை வென்றார். தொடர்ந்து 2001ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மிஸ் இந்தியா’ போட்டியில் மூன்றாவது ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தார். அந்தப் போட்டியில் செலினா ஜெட்லி பட்டம் வென்றார். அழகிப் போட்டியின் மூலம் கிடைத்த பிரபலத்தைக் கொண்டு இந்தி திரையுலகில் நுழைய முயன்றாலும், அவரால் அங்கு பெரிய அளவில் வாய்ப்புகளைப் பெற முடியவில்லை. இதையடுத்து தென்னிந்திய திரையுலகை நோக்கி தனது கவனத்தைத் திருப்பிய நமீதா, தெலுங்கு திரைப்படத்திற்கான ஆடிஷனில் பங்கேற்றார். அதன் மூலம் அவரது முதல் தெலுங்குப் படமான ‘சொந்தம்’ வெளியானது. இதைத்தொடர்ந்து விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நமீதாவுக்கு தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ‘பில்லா’ உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்தார். தொடர்ந்து ஊடகங்களின் கவனம் அவர் மீது இருந்து வந்தது. ஒரு திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவரது இருப்பே அந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்கான முக்கிய அம்சமாகப் பயன்படுத்தப்பட்டது. 2010-களின் தொடக்கத்தில் தென்னிந்தியத் திரையுலகில் பெண்களை வெறும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வைக்கும் போக்கு படிப்படியாகக் குறையத் தொடங்கியதால், நமீதாவின் திரையுலக வாழ்க்கையிலும் சரிவு ஏற்பட்டது. இதனால் சிறிய கதாபாத்திரங்கள் மற்றும் சிறப்புத் தோற்றங்களில் நடிக்கும் வாய்ப்புகளே அவருக்குக் கிடைத்தன. பின்னர் 2017ஆம் ஆண்டு ‘பிக் பாஸ் தமிழ்’ முதல் சீசனில் போட்டியாளராகப் பங்கேற்றார். இதன் மூலம் மீண்டும் குறுகிய காலத்திற்கு மக்கள் மத்தியில் பேசப்படும் நபராக மாறினார். அதன் பின்னர் நமீதா தனது அரசியல் பயணம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திடீர் புகழ், திரையுலக வெளிச்சம்; ஆணவத்தின் உச்சமாக இருந்தேன்: தன்னை மாற்றிய சம்பவம் குறித்து நமிதா உடைத்த ரகசியம்
PulseNews சுருக்கம்

2000-களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நமீதா, தனது ஆரம்ப கால வாழ்க்கையில் இருந்த ஆணவம் மற்றும் தவறான படத் தேர்வுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். டூரிங் டாக்கீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தான் நடித்திருக்கக் கூடாத படங்கள் மற்றும் தனது நடத்தை குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் திரையுலக நண்பர்கள் சிலர், காலம் கடந்து செல்வதற்கு முன்பே தன்னை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியதை அவர் நினைவு கூர்ந்துள்ளார். ஆரம்ப காலத்தில் தான் மிகுந்த ஆணவத்துடன் இருந்ததை ஒப்புக்கொண்ட நமீதா, தனது மாற்றத்திற்கான காரணங்கள் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema