PulseNews
சினிமா

சாப்பிட்ட பாதி வெள்ளரிக்காய் துண்டு, எரிந்த வளையல்கள்! மொட்டை மாடியில் நடந்த அட்டூழியம்.... அடுக்கடுக்காக வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்!!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வீட்டுக்குள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி, அவரது மனைவி பிரீதிலதா, மகள் ஆகமி மற்றும் 12 வயது மகன் பிரியம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதால், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர். வீட்டுக்குள் கிடைத்த தடயங்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீசாருக்கு சில முக்கிய தடயங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பாதியாக சாப்பிடப்பட்ட வெள்ளரிக்காய் மற்றும் எரிந்த வளையல்கள் ஆகியவை விசாரணையில் கவனம் பெற்றுள்ளன. குடும்பத்தினர் உயிரிழந்த பிறகும் சிலர் வீட்டுக்குள் சில மணி நேரம் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதையும் படிங்க: ஒரே இரவில் மொத்த குடும்பமும் காலி! மொட்டை மாடி, படிக்கட்டுகள், கட்டுலுக்கு அடியில் கிடந்த உடல்கள்... மிரண்டு போன போலீஸ்! ஓய்வுபெற்ற ஆசிரியர் குடும்பத்தில் நடந்தது என்ன? பகீர் சம்பவம்!!! போதைப்பொருள் விவகாரத்தில் மோதலா? முதற்கட்ட விசாரணையில், வீட்டின் மாடியில் போதைப்பொருள் பயன்பாட்டை குடும்பத்தினர் எதிர்த்ததால் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து குடும்பத்தினருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இரு உறவினர்கள் கைது இதனிடையே, குடும்பத்தினரின் இரு உறவினர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களுக்கு கொலை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது. போலீசாருடன் குற்றப்புலனாய்வுத் துறை மற்றும் உளவுப் பிரிவினரும் இணைந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் தொடர்ந்து நடைபெறும் விசாரணையின் அடிப்படையில், ரங்க்பூர் குடும்ப கொலை சம்பவத்தின் முழுப் பின்னணி தெரியவரும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். இதையும் படிங்க: அய்யோ... கடவுளே! மனைவியின் வாட்ஸ்அப் மெசேஜைப் பார்த்து அலறி அடித்து ஓடிய கணவன்! இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்..!!!

Tamil Spark15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சாப்பிட்ட பாதி வெள்ளரிக்காய் துண்டு, எரிந்த வளையல்கள்! மொட்டை மாடியில் நடந்த அட்டூழியம்.... அடுக்கடுக்காக வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்!!!
PulseNews சுருக்கம்

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தங்கள் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி, அவரது மனைவி பிரீதிலதா, மகள் ஆகமி மற்றும் 12 வயது மகன் பிரியம் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் வீட்டை ஆய்வு செய்த காவல்துறைக்கு அங்கிருந்து சில முக்கிய தடயங்கள் கிடைத்துள்ள நிலையில், இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema