பிரபல ஹீரோயின் சிறப்பு நடனம்; வெளியான ‘ஜெயிலர் 2’ பாடலின் புரோமோ!
ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வர அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஆகியோரும் நடித்திருப்பதாகத் திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளதாகத் தகவல் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதத்தில் சென்னையில் தொடங்கி கேரளா, கோவை, கோவா எனப் பல்வேறு பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வந்தது. இதில் ஏகப்பட்ட முன்னணி பிரபலங்கள் நடித்து வந்ததால் நீண்ட மாதங்களாக படப்பிடிப்பு நீண்டது. இதில் கடைசி கட்டத்தில் ஷாருக்கான் நடிக்கவிருந்ததாகவும் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி வெளியான வீடியோவும் ரசிகர்களின் வரவேற்பை அதிகரித்தது. குறிப்பாக பின்னணியில் இடம் பெற்ற இசை பலரது பாராட்டை குவித்தது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடல் வரும் 21ஆம் தேதி வெளியாகும் என நேற்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அதற்கான புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்பாடல் ‘அலா போலேலோ(Ala Bolelo)’ எனும் தலைப்பில் அனிருத் குரலில் உருவாகியுள்ளது. மேலும் நடிகை பூர்ணா சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார். இவர் கந்தகோட்டை, துரோகி, கொடி வீரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் தெலுங்கில் இவர் நடனமாடிய ‘குர்ச்சி மடத்தபெட்டி’(குண்டூ காரம்) நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘அலா போலேலோ’ பாடல் முதல் பாகத்தில் வரவேற்பை பெற்ற ‘காவாலா’ பாடல் போல் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்பாடலுக்கு எழுதிய அருண்ராஜா காமராஜ் மற்றும் நடன அமைப்பாளர் ஜானி இப்பாடலிலும் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து. Ala Bolelo fever is about to begin in 2 days! 🤩🪘 #Jailer2 First Single #AlaBolelo is releasing on Aug 21 🔥 @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @shamna_kkasim @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk #PallaviSingh @valentino_suren ... pic.twitter.com/7nfjXHf0vM — Sun Pictures (@sunpictures) August 19, 2026

ரஜினி மற்றும் நெல்சன் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பாடல் புரோமோ வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, மிர்னா மேனன், விஜய் சேதுபதி மற்றும் வித்யா பாலன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்த வரிசையில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி இப்படத்தில் ஒரு குத்து பாடலுக்குச் சிறப்பு நடனம் ஆடியுள்ளார். இதைக் குறிக்கும் வகையில் அந்தப் பாடலின் புரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.