பிரபல கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்த நடிகர் பீட்டர் குல்லன் காலமானார்!
பிரபல வாய்ஸ் ஆர்டிஸ்ட் மற்றும் நடிகர் பீட்டர் குல்லன்(85) காலமானார். கனடாவைச் சேர்ந்த இவர், முதலில் அந்நாட்டின் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்பு 1984-ல் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் தொலைக்காட்சித் தொடரில் ஆப்டிமஸ் பிரைம் என்ற கதாபாத்திரத்திற்கு தனது குரல் மூலம் உயிர் கொடுத்து பிரபலமானார். இதனிடையே 'தி நியூ அட்வென்ச்சர்ஸ் ஆஃப் வின்னி தி பூ' என்ற தொலைக்காட்சி அனிமேஷன் தொடரில் மனச்சோர்வுள்ள கழுதையான ஈயோர் பாத்திரத்திற்கும், அது தொடர்பான பல நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கும் அவர் குரல் கொடுத்துள்ளார். தொடர்ந்து நைட் ரைடர் தொலைக்காட்சித் தொடரில் கிட்-இன் தீய எதிர் பாத்திரமான கார், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேகரின் 1987 திரைப்படத்தில் வரும் தி பிரிடேட்டரின் கிளிக்கிங் குரல்கள் மற்றும் 1976-ல் கிங் காங்கின் கர்ஜனைகள் ஆகியவை அவரது மறக்கமுடியாத படைப்பாகும். மேலும் 1980கள் மற்றும் 90களில் வெளியான ஸ்பைடர்-மேன், டாங்கி காங், ஆல்வின் & தி சிப்மங்க்ஸ், டஞ்சன்ஸ் & டிராகன்ஸ், மை லிட்டில் போனி, டக் டேல்ஸ் மற்றும் கம்மி பியர்ஸ் உள்ளிட்ட அனிமேஷன் தொடர்களில் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்தார். இவரது மறைவு இயற்கையான முறையில் அவரது குடும்பத்தினரால் சூழப்பட்டு கண்மூடினார். இவரது மறைவு சினிமா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல குரல் கலைஞர் மற்றும் நடிகரான பீட்டர் குல்லன் தனது 85-வது வயதில் காலமானார். கனடாவைச் சேர்ந்த இவர், அந்நாட்டின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தனது கலைப்பயணத்தைத் தொடங்கினார்.
கடந்த 1984-ஆம் ஆண்டு வெளியான 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்' தொடரில், ஆப்டிமஸ் பிரைம் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து உலகம் முழுவதும் பெரும் புகழ்பெற்றார். மேலும், 'தி நியூ அட்வென்ச்சர்ஸ் ஆஃப் வின்னி தி பூ' அனிமேஷன் தொடரில் ஈயோர் என்ற கதாபாத்திரத்திற்கும் இவர் குரல் வழங்கியுள்ளார்.