நாயகன் கமல் மகள், அஜித் தங்கை; கண்ணாத்தாள் நடிகை இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? விஜய் பற்றி சொன்ன கருத்து
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில், குழந்தை நட்சத்திரமாகவும், ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ள நடிகை நீனா ஞாபகம் இருக்கிறதா? நாயகன் படத்தில் கமல்ஹாசனின் இளம்வயது மகளாகவும், சித்தி சீரியலில் ராதிகாவின் மகளாகவும் நடித்திருந்த இவர் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 1987-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் 'நாயகன் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தவர் தான் நீனா. அடுத்து கேளடி கண்மணி, மீரா போன்ற படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர், 1997-ஆம் ஆண்டு வெளியான ராசி படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார். 1998-ம் ஆண்டு வெளியான 'கண்ணாத்தாள்' திரைப்படம் இவருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது. இதில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் அதிகப்படியான ரசிகர்களிடம், நீனாவை கொண்டு சேர்த்தது. குறிப்பாக, பெண்கள் விரும்பும் ஒரு கதாபாத்திரமாக 'கண்ணாத்தாள்' திரைப்படத்தில் நீனா நடித்திருந்தார். எனினும், சினிமாவில் தொடர்ச்சியான வாய்ப்புகள் வராததால் தொலைக்காட்சி சீரியல்கள் பக்கம் தனது கவனத்தை நீனா திசை திருப்பினார். இதில், 'சித்தி' 'அண்ணாமலை' போன்ற தொடர்கள் ரசிகர்களிடம் ஹிட்டானது. சினிமாவை தாண்டி மேலும் பலருக்கு நீனாவை அறியும் வகையில் இந்த சீரியல்கள் இருந்தன. அதன் பின்னர், சினிமா மற்றும் சின்னத்திரை ஆகியவற்றில் இருந்து படிப்படியாக நடிகை நீனா விலகத் தொடங்கினார். அந்த வகையில், கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நீனா, அதற்கடுத்து ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி விட்டார். தற்போது அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு நீனா அளித்துள்ள பேட்டியில், தனது குழந்தைகள் பற்றி பேசியுள்ளார். இதில் மகன் எது செய்தாலும், அவனிடம் இருந்து விஷயங்களை நாம் தான் பேசி வாங்க வேண்டும். ஆனால், மகள் அப்படி அல்ல, அன்று முழுவதும் என்ன நடந்தது என்பதை அவளே சொல்லிவிடுவாள். போதும்மா என்று சொல்லும் அளவுக்கு இருக்கும். தினமும் 45 நிமிடங்கள் நாங்கள் எங்காவது ட்ரைவ் போய்விடுவோம். ரொம்ப ரிலாக்ஸாக இருக்கும். பசங்கள் இல்லை நானும் என் கணவரும் தான் போவோம். கண்ணாத்தாள் படத்தில் வருவதை விடவும், அதிகமாக எனக்கு கோபம் வரும் ஒன் மில்லியன் கண்ணாத்தாள். சண்டை வந்தால் என் கணவர் வெளியில் போய்விடுவார். அதே சமயம் பிள்ளைகள் படிப்பில் ரொம்ப அக்கரையாக இருப்பார். என் மகளுக்கு திருமணம் நடந்தால் என் கணவர் போலவே ஒருவர் கிடைப்பாரா என்பது குறித்து எனக்கு கவலையாக இருக்கிறது என்று கூறியுள்ளார். முதல்வர் விஜய் குறித்து பேசிய நீனா, அவர் முதல்வர் ஆனது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது, இது இப்படியே தொடர்ந்தால் நன்றாக இருக்கும். அவரை ஒரு விருது விழாவில் பார்த்தேன். அப்போவே அவர் அமைதியாகத்தான் இருந்தார். நான் என்னை அறிமுகம் செய்துகொண்டு அவரிடம் பேசினேன். அப்போது அவர் எங்க அம்மா உங்க சீரியலை பார்ப்பார் என்று சொன்னார் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

நாயகன், ராசி, கண்ணாத்தாள் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், கதாநாயகியாகவும் நடித்த நடிகை நீனா, தற்போது ஆஸ்திரேலியாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பிறகு சின்னத்திரை தொடர்களில் கவனம் செலுத்திய அவர், கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு திரையுலகிலிருந்து விலகினார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது குடும்ப வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ள நீனா, தமிழக முதல்வர் விஜய் குறித்து பேசுகையில் அவர் முதல்வராக பொறுப்பேற்றது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். விருது விழா ஒன்றில் அவரை நேரில் சந்தித்தபோது, தனது தாயார் நீனாவின் சீரியல்களை விரும்பிப் பார்ப்பதாக விஜய் கூறியதை அவர் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.