PulseNews
சினிமா

நொடியில் நடந்த கொடூரம்.... அதிவேகத்தில் வந்த கார்.... தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியான இருவர்! பதறவைக்கும் சம்பவம்...!!!

தெலங்கானா மாநிலம் கம்பம் மாவட்டம் ரகுநாதபாலம் காவல் நிலையம் அருகே சனிக்கிழமை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. அதிவேகமாக வந்த கார், சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிவேக கார் மோதி இருவர் பலி கார் மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பயணித்த குண்டேடி ஸ்ரீனிவாஸ் மற்றும் கர்லபாடி ரிஷிகா ஆகிய இருவரும் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையும் படிங்க: பயங்கர விபத்து! சுரங்கப்பாதையில் டெம்போ மீது SUV கார் மோதி காங்கிரஸ் முக்கிய புள்ளி பரிதாப பலி! நள்ளிரவில் நடந்த பயங்கரம்..! பதைபதைக்கும் வீடியோ...!!! உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு தகவலறிந்த ரகுநாதபாலம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்து நடந்த இடத்தில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, சாலை விபத்து எவ்வாறு ஏற்பட்டது, கார் எந்த வேகத்தில் வந்தது உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து, ரகுநாதபாலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா விபத்து தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையும் படிங்க: உச்சக்கட்ட அதிர்ச்சி! இந்தியாவில் 2025 இல் சாலை விபத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை! மத்திய அரசு வெளியிட்ட பகீர் அறிக்கை.....!!!

Tamil Spark15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நொடியில் நடந்த கொடூரம்.... அதிவேகத்தில் வந்த கார்.... தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியான இருவர்! பதறவைக்கும் சம்பவம்...!!!
PulseNews சுருக்கம்

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் ரகுநாதபாலம் காவல் நிலையம் அருகே சனிக்கிழமை சாலை விபத்து ஏற்பட்டது. அதிவேகமாக வந்த கார் ஒன்று, அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த குண்டேடி ஸ்ரீனிவாஸ் மற்றும் கர்லபாடி ரிஷிகா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema