PulseNews
சினிமா

பாஜக - திமுக கூட்டணிக்கு அடித்தளம் போடுகிறாரா ரஜினிகாந்த்?ஸ்டாலின், மோடியை ஒரே மேடையில் நிறுத்தும் ரஜினிகாந்த்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சுயசரிதை நூலை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ள நிலையில், அந்த நூலின் வெளியீடு தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பை முடித்துவிட்டு, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தர்மன் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பணிகளுக்கு இடையே தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக பதிவு செய்யும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பஸ் கண்டக்டராக இருந்த காலம் முதல் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தது வரை ரஜினிகாந்த் கடந்துவந்த பாதை, சந்தித்த சவால்கள், திரையுலக அனுபவங்கள், தனிப்பட்ட வாழ்க்கையின் முக்கிய தருணங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த நூலில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரஜினியின் சுயசரிதை வெளியாகும் நாளுக்காக அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்னும் சுமார் மூன்று மாதங்களில் சுயசரிதை நூலை முடிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி, நூலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட வேண்டும் என்றும், முதல் பிரதியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொள்ளும் வகையிலும் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், பிரதமர் மோடியும் ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்கும் சூழல் உருவானால், அது வெறும் சுயசரிதை வெளியீட்டு நிகழ்ச்சியாக மட்டும் பார்க்கப்படாது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. குறிப்பாக, திமுக - பாஜக எதிர்காலத்தில் இணைந்து செயல்படக்கூடும் என்ற யூகங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரவி வருகின்றன. இதற்கு திமுக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கம் வெளியாகவில்லை என்பதையும் சிலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதுபோன்ற சூழலில்தான் ரஜினிகாந்தின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடியும், திமுக தலைவர் ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்கலாம் என்ற தகவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்படி ஒரு நிகழ்வு உண்மையாக நடந்தால், அது தமிழக அரசியல் களத்தில் நிச்சயம் பல்வேறு விவாதங்களை உருவாக்கும். குறிப்பாக, தற்போதைய கூட்டணி கணக்குகள், திமுக - பாஜக இடையிலான அரசியல் அணுகுமுறை மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து புதிய யூகங்கள் எழுவதற்கும் வாய்ப்புள்ளது. எனினும், ரஜினியின் சுயசரிதையை பிரதமர் மோடி வெளியிடுவது அல்லது முதல் பிரதியை ஸ்டாலின் பெறுவது தொடர்பான இந்த தகவல்கள் தற்போது ஆலோசனை மட்டத்திலான தகவல்களாகவே கூறப்படுகின்றன; அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இதனால், ரஜினியின் வாழ்க்கை வரலாறு ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தப் போகிறதோ, அதே அளவுக்கு அதன் வெளியீட்டு விழாவும் தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மோடி - ஸ்டாலின் ஒரே மேடையா? அப்படி நடந்தால் அது புத்தக வெளியீட்டு விழாவா... அல்லது புதிய அரசியல் அத்தியாயத்தின் தொடக்கமா? என்பதே இப்போது எழுந்துள்ள பரபரப்பான கேள்வியாக உள்ளது.

Seithipunal15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பாஜக - திமுக கூட்டணிக்கு அடித்தளம் போடுகிறாரா ரஜினிகாந்த்?ஸ்டாலின், மோடியை ஒரே மேடையில் நிறுத்தும் ரஜினிகாந்த்?
PulseNews சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்தப் புத்தகத்தின் வெளியீடு குறித்த தகவல்கள், ரசிகர்களிடையே மட்டுமல்லாது தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

தற்போது ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'தர்மன்' படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பணிகளுக்கு இடையிலும் தனது வாழ்க்கை அனுபவங்களை அவர் சுயசரிதையாகப் பதிவு செய்து வருகிறார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema