PulseNews
சினிமா

இளம் கிரிக்கெட் வீரருடன் டேட்டிங்கா? - மிருணாள் தாக்கூர் விளக்கம்!

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அவரை சுற்றி காதல் கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது. இதில் தனுஷ், கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களும் உண்டு. ஆனால் அவை அனைத்தையும் மிருணாள் தாக்கூர் மறுத்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது. இதையொட்டி அவரை விட 9 வயது சிறியவராக இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை காதலித்து வருவதாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்த நிலையில் அதன் கமெண்டில் வழக்கம் போல் மிருணாள் தாக்கூர் தகவலுக்கு மறுப்பு தெரிவித்து கமெண்ட் செய்துள்ளார். அவர் செய்த கமெண்டில், “ப்ரோ ரிலாக்ஸ்... நாங்கள் எங்கே ஒன்றாக இருந்தோம்? நீங்கள் எல்லாம் நல்ல படித்தவர்கள், அப்படியிருந்தும் இப்படிப்பட்ட வதந்திகளை எப்படி நம்புகிறீர்கள்? நம் நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. ஜென் சி தலைமுறையினரிடமிருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொண்டு, உண்மையான பிரச்சினைகள் குறித்து வீடியோக்களை உருவாக்குங்கள். அது உங்களுக்கு அதிக வியூஸ்ஸை பெற்றுத் தரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இளம் கிரிக்கெட் வீரருடன் டேட்டிங்கா? - மிருணாள் தாக்கூர் விளக்கம்!
PulseNews சுருக்கம்

நடிகை மிருணாள் தாக்கூர் தனுஷ் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் போன்றவர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது இளம் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் அவர் டேட்டிங் செய்வதாக தகவல்கள் பரவின. தன்னை விட 9 வயது சிறியவரான ஜெய்ஸ்வாலுடன் இணைத்து வெளியான வீடியோவிற்கு, மிருணாள் தாக்கூர் தனது மறுப்பை கமெண்ட் மூலம் பதிவு செய்துள்ளார்.

அதில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், இதுபோன்ற செய்திகளை உருவாக்குவதை விட்டுவிட்டு உண்மையான சமூகப் பிரச்சினைகள் குறித்து வீடியோக்களை பதிவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், படித்தவர்கள் இத்தகைய வதந்திகளைப் பரப்புவது குறித்து அவர் தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema