PulseNews
சினிமா

"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சுந்தர்ராஜன். பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான திரைப்படம் வைதேகி காத்திருந்தாள்.

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு:

விஜயகாந்த் மென்மையான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற ராசாத்தி உன்ன காணாதா பாடல் காலத்திற்கும் அழியாத பொக்கிஷமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

ராசாத்தி உன்ன பாடலை மறைந்த வித்தக கவிஞர் வாலி எழுதியிருப்பார். இந்த பாடல் உருவான விதம் குறித்து இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது இயக்குனர் பாலு ஆனந்த் இன்று தவறிவிட்டார். மிகவும் திறமையானவர்.

பல்லவி எழுதியது இவரா?

பூ போட்ட சேலை..
பொழுதோட வேலை...
காத்தோட கதை பேசுது..
அது ராக்காலமான
ராகங்கள் தானா பூப்பூத்து...

இதுதான் வாலி எழுதியது.

அப்போது, அசோசியட் இயக்குனராக இருந்த பாலு ஆனந்த்

ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சுனு
காத்தாடி போல் ஆடுதுனு

போட்டா நல்லா இருக்குமேனு சொன்னேன்.

இப்போது இந்த மேடையில் அவனைப் பத்தி பேசுற அளவுக்கு அவன் நடந்துகிட்டான்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பாடலின் பல்லவியை மட்டும் பாலு ஆனந்த் எழுதியுள்ள நிலையில், எஞ்சிய பாடலை வாலி எழுதியுள்ளார். 1984ம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது 42 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தகவலை இயக்குனர் சுந்தர்ராஜன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

யார் இந்த பாலு ஆனந்த்:

இயக்குனர் பாலு மகேந்திரா நானே ராஜா நானே மந்திரி, அண்ணாநகர் முதல் தெரு, உனக்காக பிறந்தேன் என பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அண்ணாநகர் முதல் தெரு படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

நடிகராக வானத்தைப் போல, ஜேம்ஸ் பாண்ட், பிஸ்தா, டாடா பிர்லா, அன்பே சிவம் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

காதலியின் பிரிவும், அவளை இழந்த வலியை மிக அழகாக வார்த்தைகளால் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்த ஒரு பாடலாக இந்த ராசாத்தி உன்னை பாடல் உள்ளது. 42 ஆண்டுகளை கடந்தும் இந்த பாடலுக்கு என்று ரசிகர்கள் தொடர்ந்து உள்ளனர். சுந்தர்ராஜன் இந்த தகவல் மட்டுமின்றி பல்வேறு சுவாரஸ்யமான தனது திரை அனுபவங்களையும் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
PulseNews சுருக்கம்

இயக்குனர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'வைதேகி காத்திருந்தாள்' திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு' பாடல் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், 42 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புகழ்பெற்ற பாடலை எழுதியது வாலி அல்ல என்ற உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema