PulseNews
சினிமா

அஜித்தின் ‘டேர் டெவில்’ படம் எப்படி இருக்கும்? ‘டேர் டெவில்’ குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன தகவல்!

‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணைந்துள்ள நிலையில், அவர்களது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ‘டேர் டெவில்’ திரைப்படம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சிறந்த கமர்ஷியல் இயக்குநருக்கான விருதை ஆதிக் ரவிச்சந்திரன் பெற்றார். அப்போது பேசிய அவர், ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு கிடைக்கும் எந்தவொரு விருதாக இருந்தாலும் அதை அஜித்துக்கே சமர்ப்பிப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தனது திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தான் மிகவும் துவண்டு இருந்த காலகட்டத்தில்தான் அஜித்தை சந்தித்ததாக கூறிய ஆதிக், முதல் நாளிலிருந்தே அஜித் தன் மீது முழு நம்பிக்கை வைத்து ஊக்கப்படுத்தியதாக தெரிவித்தார். மேலும், அஜித்துடன் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பில் செலவிட்ட 73 நாட்களும் தனது வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.இதைத்தொடர்ந்து தனது அடுத்த அஜித் படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவலையும் ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்தார். “‘குட் பேட் அக்லி’ மாதிரியே மீண்டும் ஒரு படம் பண்ணினால், அது அந்தப் படத்தையே திரும்ப பார்ப்பது போல் இருக்கும். அடுத்து அஜித் சாருடன் நான் பண்ணும் படம் அதற்கு நேர் எதிராக இருக்கும். நிச்சயம் குழந்தைகள், குடும்பங்கள் என எல்லோரும் கொண்டாடும் கமர்ஷியல் படமாக அது இருக்கும்” என்று ஆதிக் தெரிவித்தார். இதனால் ‘டேர் டெவில்’ திரைப்படம் ‘குட் பேட் அக்லி’யின் அதே பாணியில் உருவாகாது என்பதும், முற்றிலும் மாறுபட்ட கமர்ஷியல் களத்தில் அஜித்தை ரசிகர்கள் பார்க்கப்போகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜித்துடன் இணையும் இந்தப் படம் முதலில் ‘ஏகே64’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் இதற்கு ‘டேர் டெவில்’ என அதிகாரப்பூர்வமாக தலைப்பு அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் நிலையில், அஜித்–ஆதிக் கூட்டணியின் இந்த மாறுபட்ட முயற்சி எப்படி அமையப்போகிறது என்பதே தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ‘குட் பேட் அக்லி’யின் மாஸ் அதிரடிக்கு முற்றிலும் மாறான குடும்பத்துடன் ரசிக்கும் கமர்ஷியல் விருந்தாக ‘டேர் டெவில்’ வருமா? என்ற எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Seithipunal15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அஜித்தின் ‘டேர் டெவில்’ படம் எப்படி இருக்கும்? ‘டேர் டெவில்’ குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன தகவல்!
PulseNews சுருக்கம்

‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் அடுத்த படமான ‘டேர் டெவில்’ எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை இயக்குநர் பகிர்ந்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் சிறந்த கமர்ஷியல் இயக்குநருக்கான விருதைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன், இந்தத் திரைப்படம் குறித்து முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema