விவாகரத்து மனு வாபஸ், 'சிக்மா' விழாவில் சர்ப்ரைஸ்: விஜய் சங்கீதா இணைவது பற்றி பிரபலம் சொன்ன முக்கிய தகவல்
முன்னணி நடிகராக இருந்த விஜய் தற்போது தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று இருந்தாலும், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்த நிகழ்வு, விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தூண்டுகோலாக இருந்தது. ஆனால், தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சங்கீதா தனது விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுள்ளது விஜய் ரசிகர்கள், த.வெ.க தொண்டர்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் காவிரி பிரச்னை, மற்றும் தொகுதி மறுவரையறை, சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் என அரசியல் அழுத்தங்களை சந்தித்து வரும் விஜய்க்கு, இந்த விவாகரத்து மனு வாபஸ் பெற்ற செய்தி, அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை தொடர்பான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் வெங்கடேசன் கூறியுள்ளார். இதுகுறித்து மீடியா சர்கிள் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், முன்னதாக விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அளித்த பேட்டியில், அப்பாவின் வெற்றியால் தங்களுக்கு பொறுப்பு அதிகம் என்று குறிப்பிட்டது அவருடைய தாய் சங்கீதா மற்றும் சகோதரி திவ்யா ஆகியோரையும் உள்ளடக்கியதுதான். தாயின் சொல்லைத் தட்டாத பிள்ளைகளாக இருவரும் வளர்ந்துள்ளனர். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, குடும்பத்தைக் கவனிக்காதவர் என்று அவர் மீது கடுமையாக விமர்னங்கள் முன் வைக்கப்பட்டது. இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் சஞ்சயின் பேச்சு இருந்தது. அதே சமயம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்ற முடிவு அமைந்துள்ளது. சங்கீதாவின் இந்த செயல் அவரது மகள் திவ்யாயாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. சங்கீதா தற்போது லண்டனில் இருக்கிறார். அவர் விரைவில் சென்னை வர வாய்ப்புள்ளது. வரும் ஆகஸ்ட் 25 அன்று விஜய் - சங்கீதா தம்பதியரின் 27-வது திருமண நாள் வரவுள்ள நிலையில், அவர்கள் மீண்டும் இணைந்து சுமுகமாக வாழ வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. அதேசமயம், ஏஜிஎஸ் குடும்ப விழா ஒன்றில் விஜய்யும் திரிஷாவும் கலந்து கொண்டது மற்றும் பிறந்தநாளுக்குப் பழைய போட்டோக்களை ஷேர் செய்து, கேக் வெட்டியது போன்றவை தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கியது. இதில் ஏஜிஎஸ் நிறுவனத்திற்குப் மிகப்பெரிய வெற்றிப் படமான பிகில் அமைந்ததால், அந்த விழாவுக்கு அழைக்கப்பட்ட 2 பேரும் நடிகர்களாகப் பங்கேற்றனர். எனவே அதை தவறான கோணத்தில் பார்க்க வேண்டியதில்லை. அதேபோல் விஜய் பிறந்த நாளில் த்ரிஷா வெளியிட்ட போட்டோ அது புதிய போட்டோ அல்ல, பழைய போட்டோ தான். அடுத்து அஜித் அவர்களின் தாயார் மறைவின் போது, துக்க நிகழ்வுகளுக்கு அழைப்பை எதிர்பார்க்காமல் செல்வதுதான் நட்பு மற்றும் மனிதநேயம். அதைத்தான் அவர்கள் இருவரும் செய்தனர். டிசம்பர் 2025ல் தாக்கல் செய்யப்பட்ட மனு பிப்ரவரியில் வெளியில் கசிந்தபோதிலும், சங்கீதாவோ அல்லது மகன் சஞ்சயோ எந்த மீடியாவுக்கும் பேட்டி அளித்து விஜய்க்கு எதிராகப் பேசவில்லை. சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தாலும், விஜய் தரப்பில் அதை எளிதாகக் கொடுத்துவிட்டுப் பிரிய விரும்பவில்லை. குடும்பத்தை பிரியக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருந்தார். சங்கீதாவுக்கு எதிரான கருத்துகள் விஜய் ரசிகர்களின் பெயரில் இயங்கும் சில போலி சமூக வலைதளக் கணக்குகள் மூலம் பதிவிடப்பட்டது. விஜய் தனி நபராகப் போராடி வெற்றி பெற்றிருந்தாலும், அவருக்கும் ஒரு குடும்ப நிம்மதி தேவை. அதைத்தான் மக்களும், அவரது தொண்டர்களும் விரும்புகிறார்கள். விஜய்-சங்கீதா இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் மக்களின் விருப்பமாக உள்ளது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு குறுகிய காலத்தில் கட்சி ஆரம்பித்து முதலமைச்சரான விஜய்யின் புகழுக்கு, இந்த விவாகரத்து வழக்கு ஒரு கெட்ட பெயராக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே சங்கீதா வழக்கை வாபஸ் பெற்றார். நீலாங்கரை இல்லத்தில் இவர்கள் இருவரும் குடும்பமாக மீண்டும் ஒன்றிணைந்து வாழக் கூடிய நல்ல செய்திகள் விரைவில் வரக்கூடும். ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா இருவருக்குமே திருமண வயது நெருங்கி வரும் சூழலில், பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் சிக்மா பட ஆடியோ வெளியீட்டு விழாவில் இவர்கள் குடும்பமாக இணைந்து வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் மீது அவரது குடும்ப வாழ்க்கை குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இந்தச் செய்தி விஜய் ரசிகர்கள் மற்றும் த.வெ.க தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் குடும்பப் பொறுப்புகளை உணர்ந்து எடுக்கப்பட்ட இந்த முடிவு, விஜய் மற்றும் சங்கீதாவின் பிள்ளைகளான ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யாவிற்கும் நிம்மதியை அளித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 25 அன்று விஜய் - சங்கீதா தம்பதியரின் 27-வது திருமண நாள் வரவுள்ள நிலையில், இருவரும் மீண்டும் நீலாங்கரை இல்லத்தில் இணைந்து வாழ வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், விஜய் அரசியலில் ஈட்டியுள்ள நற்பெயருக்குக் களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் நடைபெறவுள்ள 'சிக்மா' பட விழா போன்ற நிகழ்வுகளில் இவர்கள் குடும்பமாக இணைந்து பங்கேற்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.