PulseNews
சினிமா

Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

கோபத்தில் சாமுண்டீஸ்வரி:

நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்தில் எதிர்பாராத அதிர்ச்சியை சந்தித்த நிலையில், இன்று நடைபெறவுள்ள பரபரப்பான சம்பவங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க உள்ளன.

ரேவதியின் வேண்டுகோளை ஏற்ற பஞ்சாயத்து, கார்த்திக் மற்றும் ரேவதியை காசு வெட்டி பிரித்தது செல்லாது என்று தீர்ப்பளிக்கிறது. இதனால் சாமுண்டீஸ்வரி கடும் கோபத்தில் ஆழ்கிறாள்.

சவால் விட்ட கார்த்திக்:

இதனைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரியை சந்திக்கும் கார்த்திக், "ரேவதியை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அவள் விருப்பப்பட்டுத்தான் என்னுடன் வந்திருக்கிறாள். அது உங்களுக்கும் தெரியும். என்னையும் ரேவதியையும் யாராலும் பிரிக்க முடியாது" என்று உறுதியாக சவால் விடுக்கிறான்.

மறுபக்கம், அம்மா என்ன பேசினார் என்று ரேவதி கார்த்திக்கிடம் கேட்கிறாள். ஆனால் நடந்ததை முழுமையாக கூறாமல் கார்த்திக் சற்று மாற்றிச் சொல்கிறான். இருந்தாலும், அம்மா என்ன பேசியிருப்பார் என்பதை ரேவதி புரிந்துகொண்டு மனதிற்குள் வருத்தப்படுகிறாள்.

எரிச்சலின் உச்சத்தில் சாமுண்டீஸ்வரி:

அடுத்ததாக சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு திரும்ப, வீட்டில் உள்ள அனைவரும் பஞ்சாயத்து முடிவை தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றனர். பஞ்சாயத்தில் நடந்த விஷயங்களை சாமுண்டீஸ்வரி கூறியபோது, ராஜராஜன் ரேவதிக்கு ஆதரவாக பேசுகிறார். இதனால் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரி மேலும் எரிச்சலடைகிறாள்.

கோயிலுக்குச் செல்லச் சொல்லும் பரமேஸ்வரி:

இந்நிலையில், ரேவதி பரமேஸ்வரி பாட்டியிடம் நடந்த அனைத்தையும் கூறி மனக்குமுறலை வெளிப்படுத்துகிறாள். அதைக் கேட்டு வருத்தப்படும் பரமேஸ்வரி, "உன் அம்மா ஏன் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை" என கூறுகிறார். மேலும், ஒரு கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றினால் உன்னையும் கார்த்திக்கையும் யாராலும் பிரிக்க முடியாது என்று நம்பிக்கையூட்டும் அறிவுரையையும் வழங்குகிறார்.

இப்படி பல திருப்பங்களுடன் நகரும் கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்ள, இன்று இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எபிசோடை தவறாமல் காணுங்கள்.

Abp News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்
PulseNews சுருக்கம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம். இதில் ரேவதியின் கோரிக்கையை ஏற்று, கார்த்திக் மற்றும் ரேவதியின் திருமண பந்தம் செல்லாது என்ற தீர்ப்பை பஞ்சாயத்து ரத்து செய்துள்ளது.

இந்தத் தீர்ப்பால் சாமுண்டீஸ்வரி கடும் கோபமடைந்துள்ளார். மாமியாருக்கு மருமகன் சவால் விடுவதும், பாட்டி பரிகாரம் செய்யச் சொல்வதும் என இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக அமையவுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema