PulseNews
சினிமா

குரங்கு விவகாரம் - அடுத்தடுத்து சிக்கலில் மாட்டும் விக்ரம்!

நடிகர் விக்ரம் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சர்ச்சையும் ஆனது. விக்ரம் விளையாடிய குரங்கு தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட அரிய வகை குரங்கான ‘லார் கிப்பான்’ என்பது தெரியவந்தது. மேலும் அக்குரங்குகள் அழியும் நிலையில் உள்ள குரங்கினம் என்பது தெரியவந்தது. இந்​திய வனவிலங்கு பாது​காப்பு சட்​டத் திருத்​தத்​தின்​படி, சர்​வ​தேச அளவில் பாது​காக்​கப்​பட்ட வெளி​நாட்டு விலங்​கினங்​களை வணிக ரீதி​யாக வாங்​கு​வதும், விற்​பதும், வீடு​களில் வளர்ப்​பதும் சட்​ட​விரோதம் ஆகும். இதனால் முறைப்படி விக்ரம் விளையாடிய குரங்கு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டதா? வனத்துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்ற பல கேள்விகள் எழுந்தது. பின்பு இந்த விவகாரம் பெரிதாக எழுந்த நிலையில் விக்ரம் அந்த வீடியோவை நீக்கி விட்டார். இருப்பினும் வைரலான வீடியோவை வைத்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த வீடியோ மறைந்த முன்னாள் முதல்வரின் மூத்த மகன் மு.க.முத்து வீட்டில் எடுத்துள்ளது தெரியவந்தது. மு.க.முத்துவின் பேரனுக்குத்தான் தனது மகளை கட்டி கொடுத்துள்ளார் விக்ரம். இதனால் மகளை பார்ப்பதற்காக சென்ற போது அங்கிருந்த குரங்கினை விளையாடி வீடியோ எடுத்துள்ளதும் அந்த குரங்கு விற்பனைக்காக வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடந்து தற்போது விக்ரமிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னை முட்டுக்காட்டு பகுதியில் படப்பிடிப்பில் இருந்த விக்ரமிடம் குரங்குடன் வீடியோ எடுத்தது ஏன்? அதைப் பதிவிட்டு நீக்கியது ஏன்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில்களை பெற்றனர். இந்த நிலையில் விக்ரமிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளனர். 3 நாட்களுக்குள் அந்த குரங்கு பற்றிய விவரங்களை வனத்துறை அலுவலகத்துக்கு நேரில் வந்து ஒப்படைக்க குறிப்பிட்டுள்ளனர்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
குரங்கு விவகாரம் - அடுத்தடுத்து சிக்கலில் மாட்டும் விக்ரம்!
PulseNews சுருக்கம்

நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குரங்கு ஒன்றுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

விக்ரம் விளையாடியது தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட 'லார் கிப்பான்' என்ற அரிய வகை குரங்கு என்பது கண்டறியப்பட்டுள்ளது. அழியும் நிலையில் உள்ள இக்குரங்கினங்கள், இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத் திருத்தத்தின்படி சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட வெளிநாட்டு விலங்கினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema