PulseNews
சினிமா

'என் பக்தி நாட்டிற்கு, அரசியல் கட்சிக்கு அல்ல'; விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விஜய் பட நடிகை

சமூக வலைதளங்களில் தன்னை ‘அந்தபக்தர்’ என அழைத்தவர்களுக்கு பதில் அளித்துள்ள நடிகை இஷா கோப்பிகர், சமீபத்திய சமூக வலைதளப் பதிவில், தனது பக்தி எந்த அரசியல் கட்சியின் மீதும் இல்லை என்றும், தனது நாட்டின் மீதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தேசப்பற்று என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், நாடு தங்களுக்கு என்ன செய்தது என்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்காமல், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தங்களால் என்ன செய்ய முடியும் என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இஷா கோப்பிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 18) வீடியோ ஒன்றைப் பகிர்ந்தார். அதில், தன்னை ‘அந்தபக்தர்’ என அழைப்பது குறித்து பேசிய அவர், “உங்கள் நாட்டை நேசிப்பது, இந்தியாவின் மீது நம்பிக்கை வைப்பது, அது முன்னேற வேண்டும் என்று விரும்புவது ஆகியவை பக்தி என்றால், ஆம், நான் ஒரு பக்தை என்று பெருமையாகச் சொல்வேன். ஒரு குருட்டுப் பக்தை என்றும் சொல்லிக்கொள்வேன். ஆனால், எனது பக்தி எந்த அரசியல் கட்சியின் மீதும் இல்லை. என் நாட்டின் மீதும், என் இந்தியாவின் மீதும்தான். தேசமே முதன்மையானது. தேசப்பற்று என்பது ஒருவர் தனது வீடாகக் கருதும் இடத்தை மதித்து, அதற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவதையும் உள்ளடக்கியது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், அந்த இடத்தை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அந்த இடத்தை மதியுங்கள். அதற்கு உங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்யுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த வீட்டைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள். ஏனென்றால், தேசப்பற்று என்பது ‘நான் என் நாட்டை நேசிக்கிறேன்’ என்று சொல்வது மட்டுமல்ல. உங்கள் நாட்டை இன்னும் சிறந்ததாக மாற்றும் வகையில் ஏதாவது செய்வதுதான் தேசப்பற்று” என்று அவர் கூறினார். மேலும், மக்கள் தங்களுடைய சிந்தனை முறையை மாற்றிக்கொண்டு, “நாடு நமக்கு என்ன கொடுத்தது என்று எப்போதும் கேட்பதற்குப் பதிலாக, நாம் நாட்டிற்கு என்ன கொடுக்க முடியும் என்று ஏன் சிந்திக்கக்கூடாது? பாருங்கள், இரண்டு வகையான குழந்தைகள் இருக்கிறார்கள். ஒருவர், தங்களது பெற்றோர் வாழ்நாள் முழுவதும் தங்களுக்கு என்ன கொடுக்கவில்லை, என்ன கொடுத்தார்கள் என்று கணக்கிட்டுக்கொண்டே இருப்பார்கள். மற்றொருவர், தங்களுக்குக் கிடைப்பதை தங்களுக்காக மட்டுமல்லாமல், தங்களது பெற்றோரின் வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக மாற்றுவார்கள். இந்த வித்தியாசம் சூழ்நிலைகளில் மட்டுமல்ல; சிந்தனையிலும் இருக்கிறது. View this post on Instagram A post shared by Isha Koppikar (@isha_konnects) இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது, என் நண்பரே. நமது சிந்தனையை மாற்றிக்கொண்டு, புதிய இந்தியாவை உருவாக்குவதில் நாமும் ஒரு பகுதியாக மாற வேண்டிய நேரம் இது. என்னை பக்தை என்று அழைக்கலாம், குருட்டுப் பக்தை என்று அழைக்கலாம், தேசியவாதி என்றும் அழைக்கலாம். நான் என் இந்தியாவை நேசிக்கிறேன். என் இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். கண்மூடித்தனமாக அல்ல; பெருமையுடனும், ஆர்வத்துடனும், எந்தத் தயக்கமும் இல்லாமலும் நம்புகிறேன். ஜெய் ஹிந்த்” என்று அவர் கூறினார். இந்த வீடியோவுடன் அவர் வெளியிட்ட பதிவில், “இந்தியாவை நேசிப்பது ‘அந்தபக்தி’ என்றால், அந்தப் பெயரை நான் பெருமையுடன் ஏற்றுக்கொள்வேன். ஏனென்றால், தவறாகத் தோன்றும் விஷயங்களை நான் கேள்வி கேட்க முடியும்; சரியான விஷயங்களைப் பாராட்ட முடியும்; அதே நேரத்தில் எல்லாவற்றையும் விட என் நாட்டை மேலாக வைக்கவும் முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு, ஜூலை மாதத்தில் ஜனநாயகம் குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்காக எழுந்த எதிர்ப்புகள் மற்றும் சமூக வலைதள விமர்சனங்களுக்கும் இஷா கோப்பிகர் பதிலளித்திருந்தார். இதற்கிடையில், திரைப்படப் பணிகளைப் பொறுத்தவரை, அர்ஜுன் மேனன் இயக்கிய உணர்வுப்பூர்வமான திரைப்படமான ‘ராக்கெட்ஷிப்’ படத்தில்தான் இஷா கோப்பிகர் கடைசியாக நடித்திருந்தார். 1998-ம் ஆண்டு வெளியான காதல் கவிதை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இஷா கோப்பியர், அடுத்து அரவிந்த்சாமியுடன் என் சுவாச காற்றே, விஜயுடன் நெஞ்சினிலே, விஜயகாந்துன் நரசிம்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'என் பக்தி நாட்டிற்கு, அரசியல் கட்சிக்கு அல்ல'; விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விஜய் பட நடிகை
PulseNews சுருக்கம்

சமூக வலைதளங்களில் தன்னை 'அந்தபக்தர்' என்று விமர்சித்தவர்களுக்கு நடிகை இஷா கோப்பிகர் பதிலடி கொடுத்துள்ளார். தனது பக்தி எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்தது அல்ல என்றும், அது தனது நாட்டின் மீது கொண்ட பக்தி என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தேசப்பற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், நாடு தங்களுக்கு என்ன செய்தது என்று மட்டும் சிந்திக்காமல், இந்தியாவின் வளர்ச்சிக்காக மக்கள் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema