Jailer: முத்துவேல் பாண்டியனின் வேட்டை ஆரம்பம்.... 3 ஆண்டுகளை நிறைவு செய்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர்..!
3 Years Of Jailer: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று, சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஜெயிலர். இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில், 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதியில் வெளியான நிலையில், இன்றுடன் (10/08/2026) மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது தொடர்பான ஸ்பெஷல் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர்' திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டாக அமைந்தது. 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான இந்தப் படம், இன்றுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்தத் தருணத்தைக் கொண்டாடும் விதமாக, படக்குழுவினர் சிறப்பு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். ரஜினிகாந்தின் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் இந்த வெற்றிப் பயணம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.